சீனாவின் சிசுவான் என்ற பிராந்தியத்தை சேர்ந்தவர் 33 வயதான சென் லி பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீர் கழிப்பதில் உபாதை ஏற்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். பொதுவாக இவர் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அடிக்கடி ரத்தமும் சிறுநீருடன் வெளியேறி தொந்தரவு அளித்து வந்துள்ளது.
தனக்கு ஏதோ சிறுநீரகப் பிரச்னை இருப்பதாக கருதி 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு கடந்தாண்டு தான் நோயின் உண்மை காரணம் தெரியவந்துள்ளது. அந்த காரணமும் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் குவாங்சு மருத்துவமனையில் இவர் பரிசோதனை செய்த போது, மருத்துவர்கள் இவருக்கு பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் உள்ளதாகவும். எனவே, இவருக்கு கருமுட்டை, கருப்பை போன்ற உறுப்புகள் உடலில் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே, தான் இவை சிறுநீரில் ரத்தமாக வெளியேறியுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த தன்மைக்கு இன்டர்செக்ஸ் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிதான மருத்துவத்தன்மை கொண்டவர்களுக்கு அவர்களின் பாலினம் மட்டுமல்லாது எதிர் பாலினத்தின் க்ரோமோசோம்கள் மற்றும் உறுப்புகளும் இருக்கும். இந்த அரிதான பாதிப்பு 2,000இல் ஒருவருக்கு தான் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரத்தின் படி, உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீத பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: சார்.. வீட்ல ’சின்ன பின் சார்ஜர்’ இல்லையா? - இலங்கை அதிபர் கோத்தபயவிடம் இன்ஸ்டாவில் நக்கலடித்த நபர்
இந்நிலையில், இந்த அரிதான தன்மை கொண்ட சீனாவைச் சேர்ந்த அந்த 33 வயது நபர் தனது பெண்ணுறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க மருத்துவரிடம் கோரியுள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் 6ஆம் தேதி இவருக்கு 3 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உறுப்புகள் நீக்கப்பட்டன. பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த சிகிச்சை இவருக்கு உடல் நிலை ரீதியான தாக்கத்தை விட மனரீதியாக கூடுதல் தாக்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு மனநல ஆலோசகர்கள் தொடர் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Sexual Health, Sexual issues