Home /News /international /

முகவரி மாறியதால் உணவை பரிசளித்த வாடிக்கையாளர் - கண்கலங்க வைத்த டெலிவரி பணியாளரின் பதில்

முகவரி மாறியதால் உணவை பரிசளித்த வாடிக்கையாளர் - கண்கலங்க வைத்த டெலிவரி பணியாளரின் பதில்

உணவை பரிசளித்த வாடிக்கையாளர்

உணவை பரிசளித்த வாடிக்கையாளர்

வீடு, அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடம் மாறிச் செல்லும்போது, நாம் இருக்கும் இடத்தின் முகவரியை மேனுவலாக புதுப்பிக்க வேண்டும் அல்லது லைவ் லொகேஷன் அப்டேட் கொடுக்க வேண்டும்.

பெருநகர மக்கள் பலருக்கு இந்த அனுபவம் நிச்சயமாக இருக்கும். ஸ்விக்கி, சொமேட்டோ, ஊபர் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலமாக உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை நாம் வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால், வீடு, அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடம் மாறிச் செல்லும்போது, நாம் இருக்கும் இடத்தின் முகவரியை மேனுவலாக புதுப்பிக்க வேண்டும் அல்லது லைவ் லொகேஷன் அப்டேட் கொடுக்க வேண்டும். ஆனால், எப்போதாவது நாம் இருக்கும் இடத்தை மறந்துவிட்டு, முந்தைய முகவரியை தவறுதலாக கொடுத்து விடுவோம்.

டெலிவரி நிறுவன பணியாளர் வந்து ஃபோன் செய்து பேசிய பிறகே தவறான முகவரியை நாம் கொடுத்திருக்கிறோம் என்பது நமக்கு தெரிய வரும். அடுத்து என்ன செய்வோம். தவறாகக் குறிப்பிடப்பட்ட முகவரி வீடு என்றால், வீட்டில் உள்ள ஒருவரையோ அல்லது அது அலுவலக முகவரி என்றால் நமது நண்பர்களையோ அழைத்து அந்த உணவை பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து விடுவோம். எதற்குமே வழி இல்லாத சூழலில் ஆர்டர் கேன்சல் செய்வோம் அல்லது டெலிவரி ஊழியரையே நாம் பயன்படுத்திக் கொள்ள சொல்லிவிடுவோம்.

நெகிழ வைத்த சம்பவம்

இதுபோல, முகவரியை தவறாகக் குறிப்பிட்டுவிட்ட நபர் ஒருவர், அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று டெலிவரி பணியாளரிடம் கூறி விட்டார். அதற்கு நன்றி தெரிவித்த அந்தப் பணியாளர், மேற்கொண்டு சொன்ன வார்த்தைகள் தான் நம் கண்களை கலங்கச் செய்வதாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த சம்பவம் குறித்து, ஷா டேவிஸ் என்ற அந்த வாடிக்கையாளர், ஃபேஸ்புக் மூலமாக தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :  52 வயதில் மறுமணம் செய்து கொண்ட தாய்... முழு மனநிறைவுடன் மகன் பகிர்ந்த புகைப்படம்!
 

முதலில், “நான் இங்கு உங்கள் உணவை டெலிவரி செய்யக் காத்திருக்கிறேன்’’ என்ற செய்தி டெலிவரி ஊழியரிடம் இருந்து டேவிஸ் மொபைலுக்கு வந்தது. ஆனால், முகவரி தவறு என்பதை அப்போது தான் உணர்ந்த டேவிஸ் இப்படியாக பதில் அளித்தார். “அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் சகோதரரே. உணவை மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள். நான் எனது முகவரியை மாற்ற மறந்து விட்டேன். நான் இப்போது மேலாண்ட் பகுதியில் இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.



இதற்கு நன்றி தெரிவித்து டெலிவரி ஊழியர் மெசேஜ் அனுப்பினார். மீண்டும் அவர் அனுப்பிய மற்றொரு மெசேஜில், “நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று எனது சகோதரனுக்கு பிறந்தநாள். நீங்கள் எங்கே என்னை உணவை எடுத்து வரச் செய்தீர்களோ, அங்கு தான் அவரும் இருக்கிறார். இத்தகைய சூழலில், அவருடன் உணவு சாப்பிடும் வாய்ப்பு உங்களால் எனக்கு கிடைத்திருக்கிறது. இது எந்த அளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. உண்மையாகவே உங்களை பாராட்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் இந்த பதிவு வைரல் ஆனது. சுமார் 1.6 லட்சம் பேர் லைக் செய்தனர். மேலும் 1.2 லட்சம் பேர் அதை ஷேர் செய்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Delivery Boys

அடுத்த செய்தி