ஹோம் /நியூஸ் /உலகம் /

காதலியின் தாய்க்கு கிட்னி தானம் அளித்தும் காதலி ஏமாற்றிவிட்டாள் - புலம்பும் காதலன்

காதலியின் தாய்க்கு கிட்னி தானம் அளித்தும் காதலி ஏமாற்றிவிட்டாள் - புலம்பும் காதலன்

Love - Representational image

Love - Representational image

இவ்வளவு பெரிய தியாகம் செய்தும் தனது காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு நபரை ஒரே மாதத்தில் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாக அந்த காதலர் புலம்பித் தவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 • News18 India
 • 2 minute read
 • Last Updated :

  தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  நரேன் நடிப்பில் வெளியான ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில், விபத்தில் சிக்கிய காதலியின் உயிரை காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியபின்னர், வேறு வழியில்லாமல் காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது இதயத்தை கொடுக்கும் நோக்கில் தற்கொலை செய்து அவர் காதலுக்காக உயிர் தியாகம் செய்து கொள்வதை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சினிமாவுக்காக அமைக்கப்படும் காட்சிகள் சில சமயம் உண்மையாகவே நடப்பதுண்டு.

  காதலுக்காக பல காதலர்கள் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு செல்வதை நம்ம ஊர் சினிமாக்கள் மூலம் பார்த்திருப்போம், ஆனால் மெக்சிகோவைச் சேர்ந்த காதலன் ஒருவர் தனது காதலை வெளிக்காட்டும் விதமாக தனது உடல் உறுப்பை காதலியின் தாயாருக்கு தானமாக அளித்து அவரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய தியாகம் செய்தும் தனது காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு நபரை ஒரே மாதத்தில் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாக அந்த காதலர் புலம்பித் தவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

  Also read:  அண்ணி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த மைத்துனர்

  மெக்ஸிகோவின் Baja California பகுதியைச் சேர்ந்த Uziel Martinez என்ற ஆசிரியர் தான் புலம்பித் தவிக்கும் அந்த காதலர். இவர் தனக்கு நேர்ந்தவை குறித்து டிக் டாக்கில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார். அதன்படி, “எனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்” என அவர் கூறியுள்ளார்.

  தான் வெளியிட்ட வீடியோவை இத்தனை பேர் பார்ப்பார்கள் என கனவிலும் நினைத்துபார்த்திராத வகையில், அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இதனை பார்த்து தர்மசங்கடம் அடைந்த Uziel Martinez, தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது. இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

  Also read:  தந்தையின் வக்கிரம்.. மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த கொடூரம்.

  அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. Martinezக்கு பலரும் ஆறுதல்களை கூறி தேற்றி வருகின்றனர். சிலரோ காதலியை இப்படி பொதுவெளியில் அவமதித்துவிட்டீர்களே என கடிந்து கொண்டுள்ளனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Love, Lovers