செல்போனில் முழு கவனம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்...!

செல்போனில் முழு கவனம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்...!
News18
  • News18
  • Last Updated: November 29, 2019, 9:17 AM IST
  • Share this:
செல்போனை பார்த்துக்கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற நபர், திடீரென தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.

அர்ஜெண்டினா தலைநகரான பியூனஸ் ஐரஸ்-ல் உள்ள ரயில் நிலையத்தில், கடந்த 13-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. செல்போனில் கவனத்தை வைத்திருந்த நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழ, அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். அந்த நேரத்தில் ரயில்கள் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
செல்போனில் கவனம் மூழ்கி பொது இடங்களில் நடப்பது போன்றவற்றால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவிலும், செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

 
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்