முகப்பு /செய்தி /உலகம் / ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் உலக சாதனை - அசத்தல் மனிதர் இவர்தான்

ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் உலக சாதனை - அசத்தல் மனிதர் இவர்தான்

ஒரு விரலில் 129 கிலோ தூக்கி கின்னஸ் சாதனை

ஒரு விரலில் 129 கிலோ தூக்கி கின்னஸ் சாதனை

இதன் மூலம் 10 ஆண்டு கால கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அசாத்திய விஷயங்களை அசால்டாக செய்து சாதனை மனிதர்களாக வளம் வருபவர்களில் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் தான் இந்த ஸ்டீவ் கீலர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் தற்காப்பு கலை நிபுணர். அத்துடன் பளு தூக்கும் திறமையும் கொண்டவரான இவர் தற்போது புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். தன்னுடைய நடு விரலை வைத்து மட்டும் 129.50 கிலோ தூக்கி இவர் ஒற்றை விரலில் அதிக எடை தூக்கிய நபர் என்ற சாதனையை தற்போது புரிந்துள்ளார்.

129.50 கிலோ எடை கொண்ட ஜிம் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஆறு இரும்பு வட்டங்களை ஒன்றாக வைத்து அதை தனது நடு விரலில் தூக்கி சுமார் எட்டு வினாடி நேரம் நிறுத்தியுள்ளார் ஸ்டீவ். இந்த சாதனையை இவர் கடந்த பிப்ரவரி மாதம் புரிந்த நிலையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவருக்கு இப்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டு கால கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார். இதற்கு முந்தைய சாதனையை பெனிக் இஸ்ரயேல்யான் என்ற நபர் 121.70 தூக்கி படைத்திருந்தார். அதேபோல், அர்மேனியாவின் சுரேன் அக்பக்யான் என்பவர் பலம் குறைவானதாக கருதப்படும் சுண்டு விரலில் 110 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குறைந்த உணவுக்கு அதிக செலவு செய்யும் அவல நிலையில் நலிவடைந்த நாடுகள் - ஐநா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கராத்தேவில் கறுப்பு பெல்ட் வைத்திருக்கும் நபரான ஸ்டீவ் இந்த பளு தூக்குவதை தனது அன்றாட பயிற்சியில் ஒன்றாக வைத்துள்ளார். தனது சாதனை குறித்து ஸ்டீவ் கூறுகையில், இதை தூக்குவதற்கு மிகவும் சிரமமாகவும் வலியாகவும் இருந்தாலும், எனது விரல் பலம் வாய்ந்ததாக இருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த சாதனையை முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது தந்தை மூலமாக தான் எனக்கு இந்த பயிற்சி அறிமுகமானது. அவருக்கு மிகவும் நன்றி எனக் கூறினார்.

First published:

Tags: Guinness, World record