வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல ஹேர் கட் பன்னுங்க என சலூன் கடைக்காரரிடம் வாடிக்கையாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், தற்போது அனைத்து வீடுகளிலும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட ஒரு நபராக மாறியிருக்கிறார். சர்வாதிகாரியாக அறியப்படும் கிம், அடிக்கடி செய்திகளில் தலைப்புச் செய்தியாக வலம்வருபவர். அமெரிக்கா, சீனா என வல்லரசு சக்திகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்து தனக்கென தனி ஸ்டைலில் நடைபோட்டு வருபவர் இந்த 37 வயதுக்காரர்.
அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்தி உலக நாடுகளை அதிர வைப்பவர். தனது சகோதரியின் கணவருக்கே மரண தண்டனை நிறைவேற்றியவர். இப்படி அவருக்கான அடையாளம் குரூரமானது. இருப்பினும் கிம் ஜாங் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னை போலவே தனக்கு ஹேர் கட் செய்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை சலூன் கடைக்காரரிடம் வாடிக்கையாளர் ஒருவர் வைத்திருக்கிறார். இதனால் மெர்சலாகியிருக்கிறார் அந்த கடைக்காரர். ஏனென்றால் கிம் ஜாங் உன் போல சிகையலங்காரம் செய்ய வேண்டும் என எவரும் விரும்பியிருக்க மாட்டார்கள். அது போல ஒரு ஹேர் ஸ்டைல் அது!
Also Read:
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!
இருப்பினும் வாடிக்கையாளர் கேட்டுவிட்டாரே, அவரின் ஆசையை நிறைவேற்றித்தானே ஆக வேண்டும் என கருதிய கடைக்காரர் அச்சு அசலாக கிம் ஜாங் உன் போலவே காட்சி தரும் வகையில் அந்த வாடிக்கையாளருக்கு சிகை அலங்காரம் செய்து விட்டிருக்கிறார்.
முடிவெட்டிய பின் வாடிக்கையாளரைப் பார்த்து, கடைக்காரரும், கடைக்காரை பார்த்து வாடிக்கையாளரும் பலமாக சிரித்துக் கொண்டனர். கிம் ஜாங் உன்னுக்கு வேண்டுமானால் அது பொருந்தலாம், வேறு யாரேனும் அந்த சிகையலங்காரத்தில் காட்சி தந்தால் காமெடி பீஸாக தான் பார்க்கப்படுவார்கள்.
Also Read:
குடும்ப மானத்தை வாங்கிட்டாரு.. தந்தையை கொன்ற மகன் சொன்ன பகீர் காரணம்!
கிங் ஜாங் உன் போல சிகையலங்காரம் செய்து கொண்ட அந்த வாடிக்கையாளர், தனது ரெட் இட், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது கிம் ஜாங் உன் ஹேர் கட் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பிலும், நகைச்சுவையிலும் திளைத்துள்ளனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர், வடகொரிய தேசிய தின விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் உற்சாகமாகக் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் மிகவும் உடல் எடை குறைந்து காணப்படுவதால் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.