• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அடப்பாவமே...! எதிர்பாராத விதமாக தனது ஆண்குறியை சுட்டுக் கொண்ட நபர்

அடப்பாவமே...! எதிர்பாராத விதமாக தனது ஆண்குறியை சுட்டுக் கொண்ட நபர்

இந்த செய்தி குறித்து அறிந்த நெட்டிசன்கள், சுமார் 5,000 தடவைக்கு மேல், தங்களின் சிரிப்பை அடக்கமுடியாமல் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கைத்துப்பாக்கியை தவறாக கையாண்டதன் விளைவாக தனது ஆண்குறியை தானே சுட்டுக் கொண்ட அசம்பாவித சம்பவம் இண்டியானாவில் நிகழ்ந்துள்ளது.

    எதிர்பாராதவிதம் என்ற பதம் இப்படியான ஒரு விபரீத நிகழ்வுக்கு உதவும் என்று யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இண்டியானாவை சேர்ந்த நபர், ஒருவர் தாறுமாறாக துப்பாக்கியை கையாண்டதின் விளைவு, அவருடைய ஆண்குறியையே அது பதம் பார்த்துள்ளது.

    இண்டியானாவை சேர்ந்த 46வயது நபர் மார்க் ஆண்டனி ஜோன்ஸ், தனது காலை நேர நடைபயிற்சியின் போது, வழக்கமாக தான் எடுத்துச் செல்லும் 9எம் எம் கைத்துப்பாக்கி தனது இடுப்புப் பகுதியில் இருந்து கீழே விழ பார்த்துள்ளது. அதனை கீழே விழாமல் தடுக்க நினைத்த போது அவரது கை எதிர்பாராதவிதமாக ட்ரிகரில் பட்டு அவரது ஆண் குறியை பதம் பார்த்துள்ளது.

    உடனடியாக அருகில் உள்ள மரியன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் பிழைத்துள்ளார்.



    போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தகவலை ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கைத்துப்பாக்கி உரிமம் பெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருப்பதை அறிந்த போலீசார், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த செய்தி குறித்து அறிந்த நெட்டிசன்கள், சுமார் 5,000 தடவைக்கு மேல், தங்களின் சிரிப்பை அடக்கமுடியாமல் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.

    ALso watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: