தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணைஅதிபர்.. சட்டவிரோதமாக நுழையமுன்றவரை கைது செய்து விசாரணை

இன்று தூத்துக்குடி வந்த கப்பலை குடியேற்ற அதிகாரிகள் சோதனையிட்டபோது, கப்பலில் ஊழியர்கள் 9 பேருடன் கூடுதலாக ஒருவர் இருந்தது தெரியவந்தது.

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 9:40 PM IST
தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணைஅதிபர்.. சட்டவிரோதமாக நுழையமுன்றவரை கைது செய்து விசாரணை
மாலத்தீவு துணை அதிபர்
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 9:40 PM IST
மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் வைத்து குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களை மாலத்தீவிற்கு கொண்டு செல்வது வழக்கமான ஒன்று.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கருங்கற்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு புறப்பட்டது விர்கோ 9 என்ற பார்ஜியா வகையிலான சிறு இழுவை கப்பல்.

கப்பல் ஊழியர்களாக 8 இந்தோனோஷிய நாட்டினரையும், ஒரு தமிழரையும் இணைத்துக் கொண்டு இழுவை கப்பல் மாலத்தீவு புறப்பட்டது.

கருங்கற்களை இறக்கி வைத்துவிட்டு கடந்த 27-ம் தேதி அங்கிருந்து தூத்துக்குடி திரும்பியது.

இன்று தூத்துக்குடி வந்த கப்பலை குடியேற்ற அதிகாரிகள் சோதனையிட்டபோது, கப்பலில் ஊழியர்கள் 9 பேருடன் கூடுதலாக ஒருவர் இருந்தது தெரியவந்தது.

கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறையினர் உதவியுடன் குடியேற்ற அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அந்த 10-வது நபர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மாலத்தீவில் 33 ஆண்டுகால சிறைத்தண்டனைக் கைதியான அவர், மாலத்தீவின் அதிபராக இருந்த யாமின் கயூமை கொல்ல முயன்றது தொடர்பாக 4 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also watch: செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...