ஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை! மலேசிய பிரதமர் மறுப்பு

ஜாகிர் நாயக், மலேசிய குடிமகன் கிடையாது. ஆனால், மலேசியாவில் நிரந்தரமாக தங்கிக் கொள்வதற்கு கடந்த அரசு அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

news18
Updated: September 17, 2019, 4:11 PM IST
ஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை! மலேசிய பிரதமர் மறுப்பு
ஜாகிர் நாயக்
news18
Updated: September 17, 2019, 4:11 PM IST
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு கொண்டுசெல்வது குறித்து பிரதம் மோடி என்னிடம் எதுவும் பேசவில்லை என்று மலேசியா பிரதமர் மஹதிர் முகமது தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் ஐந்தாவது கூட்டம் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மலேசிய பிரதமர் மஹதிர் முகமதுவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அழைத்துவருவது தொடர்பாக போது மோடி கேட்டுக்கொண்டார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோக்லே தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மஹதிர் முகமது, ‘ஜாகிர் நாயக், மலேசிய குடிமகன் கிடையாது. ஆனால், மலேசியாவில் நிரந்தரமாக தங்கிக் கொள்வதற்கு கடந்த அரசு அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. நிரந்தரமாக தங்குவதற்கு உரிமை பெற்றவர்கள் நாட்டின் கட்டமைப்பு குறித்தும் அரசியல் குறித்தும் பேசக் கூடாது. அவர், மதம் குறித்து போதனை செய்துகொண்டிருந்தார்.


தற்போது அவர் அப்படி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு அவர் தேவைப்படவில்லை. நான் மோடியைச் சந்தித்தேன். அவர், ஜாகிர் நாயக் குறித்து பேசவில்லை. ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு பிரச்னையாக இருக்கலாம்’ என்று தெரிவித்தார். முன்னதாக, ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடி பேசினார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் கூறியிருந்த நிலையில் மலேசிய பிரதமர் அதனை மறுத்துள்ளார்.

தொலைக்காட்சிகளில் இஸ்லாம் குறித்து மதபோதனை செய்துவந்த ஜாகிர் நாயக், 2016-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு நிரந்தரமாக தங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பண முறைகேடு வழக்கிலும், மத வெறுப்பு பிரச்சாரம் செய்தது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் அவரைத் தேடிவருகின்றனர்.

Also see:

Loading...

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...