பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர்... எதிர்கட்சியில் இணைந்து ஆட்சியைப் பிடிக்கத் திட்டமா?

மஹதிர் முன்னதாக கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரையில் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.

பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர்... எதிர்கட்சியில் இணைந்து ஆட்சியைப் பிடிக்கத் திட்டமா?
மலேசியா பிரதமர் மஹதிர் முகமது
  • News18
  • Last Updated: February 24, 2020, 1:39 PM IST
  • Share this:
மலேசிய பிரதமர் மஹதிர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்று மதியம் 1 மணி அளவில் பிரதமர் மஹதிர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசரிடம் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஆளுங்கட்சியுடன் ஏற்பட்ட முரண் காரணமாக எதிர்கட்சியில் இணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயல்வார் மஹஹிர் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

ஆனால், மலேசிய அரசர் பிரதமரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வாரா என்ற தகவல் வெளியாகவில்லை. மஹதிர் முன்னதாக கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரையில் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து வந்தார். பின்னர், மீண்டும் 2018-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் பதவியை ஏற்றார். 91 வயதான மஹதிர் 2018-ம் ஆண்டில் பதவி ஏற்றதிலிருந்து தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் விரோதத்தை சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பார்க்க: ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!

 
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading