ஹோம் /நியூஸ் /உலகம் /

நாங்கள் சிறிய நாடு; இந்தியா மீது நடவடிக்கை இல்லை! பாமாயில் விவகாரத்தில் மலேசிய பிரதமர் விளக்கம்

நாங்கள் சிறிய நாடு; இந்தியா மீது நடவடிக்கை இல்லை! பாமாயில் விவகாரத்தில் மலேசிய பிரதமர் விளக்கம்

இந்தியப் பிரதமர் மலேசியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் மலேசியப் பிரதமர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு கிடையாது என்று மலேசியா பிரதமர் மகாதிர் பின் முகமது தெரிவித்துள்ளார்.

  காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததையும், குடியுரிமை திருத்தச் சட்ட நடவடிக்கையும் மலேசியப் பிரதமர் மகாதிர் பின் முகமது விமர்சனம் செய்திருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாமல்ல என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

  மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியப் பிரதமர் பேசியிருந்தார். இந்தநிலையில், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அது மலேசியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  உலக அளவில் பாமாயில் உற்பத்தி செய்வதில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்தோனேசியா இந்தியாவின் பாமாயில் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால் 2019இல் இந்தோனேசியாவைவிட அதிக அளவிலான பாமயிலை இந்தியா மலேசியாவிடம் இறக்குமதி செய்தது.

  தற்போது, பாமாயில் இறக்குமதியை இந்தியா தவிர்ப்பது மலேசியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதிர் பின் முகமது, ‘இந்தியாவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகள் எதையும் மலேசியா எடுக்காது. மலேசியா சிறிய நாடு. பதிலடி கொடுக்கும் அளவுக்கான நாடு கிடையாது’ என்று விளக்கமளித்துள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: