மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், கார்கள் புரட்டிப்போடப்பட்ட நிலையில் சுமார் 43,000 பேர் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். மேலும் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையினால் ஜோகூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட 23 வயது பெண் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஜோகூர் பகுதியில் வேலைக்குச் செல்ல காரில் சென்ற 23 வயது பெண் காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டத்தில் மீட்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர். இதனுடன் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் எல்லையுடன் ஒட்டியுள்ள ஜோகூர் பகுதியில் சுமார் 4 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜோகூர் பகுதியை முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தினால் 43,000 பேர் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அவர்கள் அனைவரையும் மீட்புப்படையினர் மீட்டு அருகில் உள்ள பாதுகாப்பாக இடங்களில் தங்கவைத்துள்ளனர்.
In #Malaysia, torrential rains have resulted in deadly floods. Around 40,000 people have been displaced, and 4 have died. Take a look at the disastrous scene:pic.twitter.com/HQlrVbYg1i
— Steve Hanke (@steve_hanke) March 4, 2023
மேலும் அருகில் உள்ள போர்னியோ தீவு மற்றும் கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாதிக்கப்பட்ட இடங்களை மற்றும் மக்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வெள்ள நிவாரண திட்டங்களை விரைந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற சேதங்கள் மேலும் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அந்நாட்டு வானிலை மையம் அறிவிப்பின்படி இன்னும் மழை நீடிக்கும் என்றும் வெள்ள அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.