China | சீனா சாதனை! மலேரியாவை முற்றிலும் ஒழித்தது- 70 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

மலேரியாவை முற்றிலும் ஒழித்த சீனா

மலேரியா காய்ச்சல் என்ற தீங்கை முற்றிலும் சீனா ஒழித்து சாதனை படைத்துள்ளது. சீனாவின் 70 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று உலக சுகாதார அமைப்பு (WHO)இதைப் பாராட்டியுள்ளது.

  • Share this:
    1940ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியாக் காய்ச்சலுக்கு அங்கு ஆளாகினர், ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு மலேரியா காய்ச்சல் கேஸ் கூட இல்லாமல் சீனா சாதித்துள்ளது.

    இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “மலேரியா நோயிலிருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

    மேலும், “இந்த வெற்றி கடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லிய நடவடிக்கையினால்தான் சீனாவினால் இதைச் சாதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் மலேரியா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்பதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது” என்றார்.

    3 ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் ஏற்படாவிட்டால் அந்த நாடுகள் உலகச் சுகாதார அமைப்பின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கறாரான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மேலும் மலேரியா மீண்டு ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளையும் காட்ட வேண்டும்.

    எல் சால்வடார் (2021), அல்ஜீரியா, அர்ஜெண்டீனா (2019), பராகுவா, உஸ்பெகிஸ்தான் (2018) ஆகிய நாடுகளும் மலேரியாவை முற்றிலும் ஒழித்து விட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேற்கு பசிபிக் பகுதி நாடு ஒன்றுக்கு மலேரியா ஒழிப்பு சான்றிதழ் கிடைத்திருப்பதில் சீனா முதலிடம். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் மேற்கு பசிபிக் நாடு ஒன்று பெறுவது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா (1981), சிங்கப்பூர் (1982), புருனேய் (1987) ஆகிய மேற்கு பசிபிக் நாடுகள் மலேரியாவை ஒழித்த வெஸ்டர்ன் பசிபிக் நாடுகளாகும்.

    மலேரியாக் காய்ச்சலுக்கு உலகம் முழுதும் 2018-ல் 411,000 பேரும், 2019-ல் 409000 பேரும் பலியாகியுள்ளனர். இதில் 90% பலி ஆப்பிரிக்காவில் என்பது கவனிக்கத்தக்கது. இதில் 2,65,000 பேர் இளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் 1950களில் சீனா தன் மலேரியாவுக்கு எதிரான போரைத் தொடங்கியது. கொசு ஒழிப்புத் திட்டத்தை தீவிரமாகக் கடைப்பிடித்தது, வீட்டுக்கு வீடு கொசு மருந்து அடிக்கப்படுவது தொடங்கியது. இப்போது இந்த மலேரியாவை வெற்றிகரமாக ஒழித்தே விட்டது சீனா.
    Published by:Muthukumar
    First published: