• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு: உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள்

தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு: உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள்

மலாலா

மலாலா

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்கள் கதவுகளை திறக்க வேண்டும் என்று மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும்  தாலிபான்களுக்கு எதிராக  உலக நாடுகள் செயலாற்ற வேண்டும் என்றும் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும்  மலாலா யூசப்சையி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் கொண்டுவந்துளனர். இதனால் அடுத்து அங்கு என்ன நிகழும் என்ற பதற்றம் உலக நாடுகளை தொற்றியுள்ளது. மத அடிப்படைவாதிகளான தாலிபான்களால் பெண்களின் முன்னேற்றம் தடைபட்டு போகும் என்றும், அவர்கள் முன்புபோல் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது ஆகியவை சாத்தியமில்லாமல் போகும் என்றும் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், பெண் கல்விக்காக குரல் கொடுத்துவருபவரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாயா யூசப்சையி  பிபிசி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்து தான் மிகவும் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: இந்திய அதிகாரிகள் 130 பேருடன் ஐ.ஏ.எஃப். விமானம் காபூலில் இருந்து இந்தியா புறப்பட்டது!


    அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானின் மனித ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை பாதுகாக்க வேண்டும் என்றும் மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் செயலாற்ற தற்போது அனைத்து நாடுகளுக்குமே பங்கு உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்கள் கதவுகளை திறக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் உட்பட 24 இந்தியர்களை விடுவித்த தாலிபான்!


    பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்கு குரல் கொடுத்ததால் கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் தாலிபான்கள் 15 வயது சிறுமியாக இருந்த மலாலா மீது கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த மலாலா பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று அங்கேயே உயர் கல்வி பயின்றார். கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: