Home /News /international /

6 அறுவை சிகிச்சை, 9 வருடமாக தொடரும் துயரம் - தாலிபான் தாக்குதல் குறித்து மலாலா உருக்கம்

6 அறுவை சிகிச்சை, 9 வருடமாக தொடரும் துயரம் - தாலிபான் தாக்குதல் குறித்து மலாலா உருக்கம்

மலாலா

மலாலா

தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளாகி 9 ஆண்டுகளாகியும், அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீளமுடியவில்லை என்றுள்ளார் மலாலா.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தபிறகு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தீவிர மதவாத சிந்தனைக் கொண்ட தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை எனக் கருதி ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அலை அலையாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். தங்களால் செல்ல முடியவில்லை என்றாலும், குழந்தைகளையாவது மற்றவர்களிடம் கொடுத்தனுப்பி வருகின்றனர்.

இதனால், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளான மலாலாவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்காக தன்னுடைய குரலை பதிவு செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ தாலிபான்களின் நேரடி தாக்குதலுக்குள்ளாகி 9 ஆண்டுகளாகியும், அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. இதுவரை என் தலையில் ஆறு அறுவை சிகிச்சை செய்துள்ளேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, போஸ்டன் நகரின் எனக்கு 6வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தாலிபான்கள் சேதப்படுத்திய என்னுடைய உடலை மருத்துவர்கள் தொடர்ந்து சீர்படுத்தி வருகின்றனர்’ எனக்கூறி சிகிச்சையில் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில், தலையில் முடி நீக்கப்பட்டு குண்டு பாய்ந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு பேண்டேஜ் போடப்பட்டுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Malala (@malala)


"தாலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு 9 வருடங்களை கடந்த பின்பும், ஒரே ஒரு புல்லட் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஆப்கானிஸ்தான் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கான புல்லட்களை எதிர்கொண்டு வருகின்றனர். என்னுடைய இதயம் நொறுங்குகிறது. யாரென்றே தெரியாமல் போனவர்களுக்காகவும், வரலாற்றில் நாம் மறக்கப்போகும் நபர்களை எண்ணியும், உதவி வேண்டி அழுது கொண்டிருப்பவர்களுக்கு விடையில்லாமல் இருப்பதையும் நினைத்து என் இதயம் நொறுங்குகிறது" என மலாலா உருக்கமாக கூறியுள்ளார்.

Also Read : ஐ.எஸ் குழு மீது ஆளில்லா விமானத் தாக்குதல்- இலக்கை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

மேலும், தாலிபான்கள் தாக்கிய பிறகு கடந்த 9 ஆண்டுகளில் தான் கடந்து வந்த பாதைகள் குறித்த உருக்கமான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். சிகிச்சையில் பேச முடியாத நிலையில் இருந்தபோது, மற்றவர்களுக்கு குறிப்பு எழுதும் புகைப்படங்களைக்கூட பகிர்ந்துள்ளார். என்னால் இன்னும் அந்தநாளை மறக்க முடியவில்லை என்றுக் கூறியுள்ள அவர், தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் தாலீபான்கள் வசம் சென்றிருப்பது, பெரும் அதிர்ச்சியாக இருப்பதாகவும் மலாலா கூறியுள்ளார்.

Also Read : உடனே வெளியேறுங்கள்.. பாதுகாப்பு இல்லை - எச்சரிக்கை விடும் அமெரிக்க தூதரகம்

ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை நினைத்து பெரும் கவலை கொள்வதாகவும் மலாலா தனது வேதனையை பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் வசித்து வந்த மலாலா, பெண் உரிமை மற்றும் பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். தாலிபான்களின் அச்சுறுத்தலையும் மீறி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். இது உலகளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மலாலாவுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, அடைக்கலமும் கொடுக்கப்பட்டார். அதன்பின், உலகளவில் பெண்களுக்கான உரிமை குறித்து பரப்புரை மேற்கொண்ட அவருக்கு, அமைத்திக்கான நோபல் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Afghanistan, Taliban

அடுத்த செய்தி