Home /News /international /

தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வை 9 ஆண்டுக்கு பிறகு நினைவுகூர்ந்த மலாலா!

தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வை 9 ஆண்டுக்கு பிறகு நினைவுகூர்ந்த மலாலா!

மலாலா

மலாலா

2012ல் 9 வருடங்களுக்கு முன்னர் தனது 15 வயதில் தாலிபான்கள் மலாலாவை பள்ளிப் பேருந்தில் புகுந்து சுட்டனர். அந்த நிகழ்வை தற்போது நினைவுகூர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் செயற்பாட்டாளரான யூசுப்சாய் மலாலா. பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்ததால் 15 வயதில் பாகிஸ்தானிய தாலிபான் ஒருவரால் சுடப்பட்டார். பின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அந்த காயத்தில் இருந்து மலாலா இன்னமும் முழுவதுமாக குணமடையவில்லை. அவருக்கு சமீபத்தில் கூட ஒரு அறுவை கிசிச்சை நடந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்துக்கு பின்னர் தாலிபான்கள் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு மாகாணமாக தாலிபான்கள் கைப்பற்றிக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை அவர் மிரட்சியுடன் பார்த்து வந்தார். குந்தூஸ் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றிய ஆகஸ்ட் 9ம் தேதி பாஸ்டனில் அவர் அறுவை சிகிச்சைக்காக தயாராகி கொண்டிருந்தார்.

Also Read: உலகின் வேகமான ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்களுக்கு எலும்புகள் முறிந்ததால் அதிர்ச்சி!

2012ல் 9 வருடங்களுக்கு முன்னர் தனது 15 வயதில் தாலிபான்கள் மலாலாவை பள்ளிப் பேருந்தில் புகுந்து சுட்டனர். அந்த நிகழ்வை தற்போது நினைவுகூர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

பாகிஸ்தான் தாலிபான் ஒருவர் பேருந்தில் புகுந்து என் மீது துப்பாக்கியால் சுட்டான். அந்த குண்டு எனது இடது கண்ணை உரசி, மண்டை ஓட்டையும், மூளையையும் பதம் பார்த்தது. என்னுடைய நரம்புகள் பாதிக்கப்பட்டன. தாடை எலும்பு உடைந்தது.

Also Read:  தாலிபான்களால் பிரியாணி விலை எகிறப்போகுது – காரணம் இது தான்!

அந்த நாளில் பள்ளிப் பேருந்தில் தனது அருகே அமர்ந்திருந்த தன்னுடைய தோழியிடம் பேசியிருக்கிறார் மலாலா, அன்று அவருக்கு நடந்தது என்னவென்றே நினைவில் இல்லை என்று கூறிய மலாலா அன்று என்ன நடந்தது? நான் கத்தினேனா? ஓடினேனா என தோழியிடம் கேட்டுள்ளார்.

யூசுப்சாய் மலாலா.


இல்லை. அவன் உன் பெயரை அழைத்து கூப்பிட்ட போது நீ அமைதியாக அந்த தாலிபான் முகத்தை பார்த்தாய். என் கையை இறுகப் பற்றிக்கொண்டாய் அந்த வலி எனக்கு சில நாட்கள் நீடித்தது. அந்த தாக்குதலுக்கு பிறகு கையால் உன் முகத்தை மூடிக்கொண்டாய் பின் என் மடியில் மயங்கி விழுந்தாய்.

Also Read:  அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி அரசின் சலுகைகளை பெற இது தான் ஒரே வழி!

இச்சம்பவத்துக்கு பிறகு பெஷாவரில் மருத்துவ நிபுணர்கள் மலாலாவின் மூளை காயத்தால் விரிவடைவதை பார்த்தனர். இதனால் அவருடைய இடது பக்க மண்டை ஓட்டை நீக்கினர். இந்த அவசரகால நடவடிக்கை காரணமாகவே மலாலா உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய பிற உறுப்புகள் செயலிழக்கத்தொடங்கின. இதையடுத்து இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து லண்டனுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

யூசுப்சாய் மலாலா.


மலாலா கண்விழித்த போது அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் பேசியதை பார்த்து தான் எங்கிருக்கிறோம் என்பதே அறியாதவராக இருந்தார். அவருடைய பாதி முகம் செயலிழந்து இருப்பதை பார்த்தார். கண்ணாடி கொண்டு வரச் சொல்லி பார்த்த போது தலைமுடி பாதியாக மழிக்கப்பட்டிருப்பதை பார்த்து இதுவும் தாலிபான்கள் வேலையா என கேட்டிருக்கிறார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவ்வாறு செய்தது அவருக்கு பின்னர் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

9 ஆண்டுகளுக்கு பின்னர் இன்னமும் அந்த ஒரே ஒரு குண்டு காயத்திற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறேன் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. ஆப்கானிஸ்தானியர்கள் 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கான புல்லட்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றார் மலாலா.
Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban

அடுத்த செய்தி