சிறந்த இயக்குனர், கூட்டுழைப்பு: உங்களை ஆச்சர்யப்படுத்தும் சீரியல் மேக்கிங் வீடியோ!

சீரியல் மேக்கிங் வீடியோ
- News18
- Last Updated: October 6, 2018, 3:02 PM IST
`கிட்டிங்’ (Kidding) என்ற நாடகத்தின் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் நடிகர் ஜிம் கேரி (Jim Carrey) நடிப்பில் பிரபலமான டிவி சீரியலான கிட்டிங் வெளிவந்துள்ளது. இந்த நாடகத்தின் ஒரு பகுதியாக பெண் ஒருவர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து படிப்படியாக உற்சாகமான வாழ்விற்கு திரும்புவது போல் காட்சிகள் உள்ளன.
அதில், வீட்டை மாற்றியமைபதும், தோழிகளுடன் பேசி விளையாடுவதும், வேலை கிடைத்து வாழ்வில் முன்னேறுவது போன்ற காட்சிகள் யாவற்றையும் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நீளமான ஷாட்டை எப்படி எடுத்தார்கள் என்று ஷூட்டிங் செய்த விதம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. ஒரு அறையின் மூன்று கதவுகள் இருக்கிறது. ஆனால் சீரியலில் ஒரு கதவு மட்டுமே காட்டப்படுகிறது. மற்ற கதவுகளின் வழி அறையில் உள்ள செட் பிராபர்டிகளை உடனடியாக மாற்றுவதும். கதாநாயகி உடைக்கும் சுவரை நகற்றிவிட்டு பின் பக்கம் இருக்கும் அழகான புத்தக அலமாரி சுவர் முன் வந்து இருக்கிறது. கதாநாயகியும் நொடியில் அடுத்தடுத்து உடை மாற்றுகிறார். இப்படியாக 1நிமிடம் 48 நொடி காட்சிக்காக ஒட்டுமொத்த படக் குழுவும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கும் காட்சி பெரும் ஆச்சார்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடிகர் ஜிம் கேரி (Jim Carrey) நடிப்பில் பிரபலமான டிவி சீரியலான கிட்டிங் வெளிவந்துள்ளது. இந்த நாடகத்தின் ஒரு பகுதியாக பெண் ஒருவர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து படிப்படியாக உற்சாகமான வாழ்விற்கு திரும்புவது போல் காட்சிகள் உள்ளன.
அதில், வீட்டை மாற்றியமைபதும், தோழிகளுடன் பேசி விளையாடுவதும், வேலை கிடைத்து வாழ்வில் முன்னேறுவது போன்ற காட்சிகள் யாவற்றையும் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நீளமான ஷாட்டை எப்படி எடுத்தார்கள் என்று ஷூட்டிங் செய்த விதம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
WHATTHE
FUCK pic.twitter.com/xvQpnsCDmH
— Somov (@iam_somov) October 4, 2018