ஹோம் /நியூஸ் /உலகம் /

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. சிறைக்கு தீவைப்பு.. தப்பியோடிய கைதிகள்..!

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. சிறைக்கு தீவைப்பு.. தப்பியோடிய கைதிகள்..!

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்

மின் தடையால் பல்வேறு நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய சேவைகள் தடைபட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiapakistanpakistan

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலவிய மின்தடையால் பாகிஸ்தான் நாடு இருளில் மூழ்கியது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த மின் பகிர்மான கட்டமைப்பின் சில பகுதிகளை அதிகாரிகள் நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மின்விநியோகத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தால், நாடு முழுவதும் காலை முதல் மின் விநியோகம் தடைபட்டது. கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நகர் பகுதி ஒன்றில் பாலத்திற்கு மேலே சென்றுகொண்டு இருந்த ரயில் மின்தடை காரணமாகப் பாதியிலேயே நின்றது. தொடர்ந்து மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், முழுமையாக மின்சாரம் வழங்க 12 மணி நேரம் ஆகும் எனவும் பாகிஸ்தான் மின்சார துறை அமைச்சர் தெரிவித்தார்.

மின் தடையால் பல்வேறு நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய சேவைகள் தடைபட்டது. மின் விநியோகத்தை மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில் பாகிஸ்தான் குஜராத்தில் சிறைக்குள் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. அத்துடன் சிறைக்கு தீ வைக்கப்பட்டதாகவும், 200க்கு மேற்பட்ட கடும் தண்டனை குற்றவாளிகள் தப்பி ஓட்டம் எனவும் தகவல் பதிவாகியுள்ளது.

First published:

Tags: Pakistan News in Tamil, Pakistan Prison