• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்!

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்!

மகிந்த ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார். அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

    அண்மையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய சிறிசேனா, அந்த பதவியில் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ராஜபக்சே அரசு அடுத்தடுத்து தோல்வியடைந்தது.

    இந்த வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது. எனினும், ராஜபக்சே பதவி விலகாததால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்தது. இதனிடையே, சிறிசேனாவின் முடிவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.

    இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார். அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். சிறிசேனாவின் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: