பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு

ராஜபக்ச

இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிறகு பிரதமர் பதவியை ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக, அவரது மகன் நமல் ராஜபக்ச தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்ச மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டதால், அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் ராஜபக்ச பிரதமராக செயல்பட கீழ் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜபக்ச உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜபக்ச பிரதமராக செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்க அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ரணில் விக்கரமசிங்கே | Ranil Wickramasinghe
ரணில் விக்கரமசிங்கே


இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக அறிவிக்க முடியாது என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

Mythri bala sirisena | இலங்கை அதிபர் சிறிசேனா
இலங்கை அதிபர் சிறிசேனா


மேலும் வரும் திங்கட்கிழமை புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிறகு பிரதமர் பதவியை ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக, அவரது மகன் நமல் ராஜபக்ச தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Also see... இஷா அம்பானி - ஆனந்த் பிரமால் திருமணம்: கலர்ஃபுல் கேலரி
Published by:Vaijayanthi S
First published: