இலங்கையின் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச!

மகிந்த ராஜபக்சே

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர், நாளை காலை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. இந்தநிலையில், இலங்கையின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபரும் கோத்தபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see:


 
Published by:Karthick S
First published: