• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ராஜபக்சே பதவியேற்றது செல்லாது இலங்கைக்கு நானே பிரதமர் - ரணில்

ராஜபக்சே பதவியேற்றது செல்லாது இலங்கைக்கு நானே பிரதமர் - ரணில்

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே தான் பிரதமராக தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
இலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் மகிந்த ராஜபக்சே  பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இலங்கையின் பிரதமராக தான் தொடர்வதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று திடீரென உடைந்தது.

இதனை அடுத்து, இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.

பிரதமராக பதவி ஏற்கும் ராஜபக்சே


ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நான் பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது.

இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்ற சிறீசேனா, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிபராக பதவியேற்றார்.

Also Watch:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: