Home /News /international /

வீட்டைவிட்டு வெளியேறி திரிகோணமலையில் தஞ்சம் புகுந்த மகிந்த.. விடாமல் துரத்தம் போராட்டக்காரர்கள்

வீட்டைவிட்டு வெளியேறி திரிகோணமலையில் தஞ்சம் புகுந்த மகிந்த.. விடாமல் துரத்தம் போராட்டக்காரர்கள்

பயத்தில் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறிய மகிந்த, தனது குடும்பத்தினருடன் தப்பித்து தமிழர்கள் அதிகம் வாழும் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையில் இரண்டு நாளாக அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று காலை, போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது இரண்டு மாத இலங்கை போராட்டத்தில் திருப்புமுனையாக மாறியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவர்களின் உடைமை மீது கடுமையான தாக்குதல் நடத்த தொடங்கினர். இதன் காரணமாக தலைநகர் கொழும்பு வன்முறை களமாக காட்சி அளித்தது.

    போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மகிந்த ராஜபக்க்ஷ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னரும் போராட்டம் ஓயாமல் ஆளும் கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகள், கார்கள் சூறையாடப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்தார்.

    இதன் உச்சமாக பிரதமர் மகிந்தாவின் வீடுகள் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டன. பயத்தில் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறிய மகிந்த, தனது குடும்பத்தினருடன் தப்பித்து தமிழர்கள் அதிகம் வாழும் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரிகோண மலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம், காவல்துறைக்கு அரசு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்ட அதிபருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். மகிந்த தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓடிவிடுவார் எனக் கூறப்படும் நிலையில், இந்த தகவலை அவரது மகன் நமல் ராஜபக்க்ஷ மறுத்துள்ளார்.

    இதையும் படிங்க: மகிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு கால அரசியல்.. வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..

    இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கருத்தில், 'இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதரம் முன்னேற்றம் ஏற்பட இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்' எனத் தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mahinda rajapaksa, Sri Lanka political crisis

    அடுத்த செய்தி