இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா தீவுகளைக் கொண்ட நாடு. வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இந்தோனிஷியா நிலநடுக்கத்திற்கும் சுனாமிக்கும் பெயர் போன நாடு. இங்கு அடிக்கடி கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி உருவாவது வழக்கம். அப்படி ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்தான் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு இந்தோனேஷிய பகுதியான சிங்கில் என்ற நகரத்தில் கடற்கரையில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் 48 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இவ்வளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி ஏற்படவில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் சக்தி, திசை மற்றும் ஆழத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்காணித்துள்ளது. சுமார் 27 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்த இந்தோனேஷியாவில் பல்வேறு இடங்களில் உயிரோடு இருக்கும் எரிமலைகளும் காணப்படுகின்றன. பசிபிக் பேஷின் எனப்படும் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாட்டில் எரிமலைகளின் இருப்பால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முற்கு ஜாவா சியாங்கோர் நகரத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவுகோள் நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2018 ஆண்டிற்குப் பிறகு இந்துானேஷியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக 2004 ஆம் ஆண்டு இந்தேனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையான சுனாமி ஏற்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவில் மட்டும், 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அப்படியொடு சக்திவாய்ந்த நிலநடுக்கமோ சுனாமியோ ஏற்படவில்லை.
2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கவும், எச்சரிக்கை ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதோடு, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. சுனாமி என்றால் என்னவென்றே அறியாத இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் சுனாமி தொடர்பான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது.
2004 ஆம் ஆண்டு சுனாமி. தற்போது இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake in Indonesia, Indonesia, Indonesia Earthquake