முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

(AP Photo/Luis Alberto Cruz Hernandez)

(AP Photo/Luis Alberto Cruz Hernandez)

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதால் மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மெக்ஸிகோ நாட்டின் oaxaca மாகாணத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக தென்பட்டது. உள்ளூர் நிலவரப்படி ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. காலை 10.29 மணிக்கு கட்டடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் அலறியடித்து வீதிகளுக்கு வந்து குவிந்தனர்.

அந்நாட்டை சில நொடிகள் உலுக்கிய நிலநடுக்கம் கவுதமாலாவிலும் உணரப்பட்டது. நில நடுக்கத்தில் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

First published:

Tags: Mexico