அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் கடந்த வியாழக்கிழமை தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான ஜீவனாம்சத் தொகையை அறிவித்தார். இந்த ஜீவனாம்சம் மூலம் உலகின் நான்காவது பெண் பணக்காரர் ஆனார் மெக்கென்ஸி.
உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரும் அமேசான் நிறுவனருமான ஜெஃப் பீசோஸ் 890 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இவரது மனைவி மெக்கென்சி பீசோஸை இன்னும் 90 நாள்களில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்ய உள்ளார்.
விவாகரத்து செய்யும் ஜெஃப் தனது மனைவிக்கான ஜீவனாம்சத்தை அறிவித்துள்ளார். 25 ஆண்டு கால திருமண வாழ்விலிருந்து பிரியும் இத்தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
முன்னாள் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி லாரென் உடனான காதல் தான் இத்தம்பதியரின் மணமுறிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அமேசானில் தோராயமாக 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 4% பங்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மெக்கென்ஸி இணைகிறார். ஜெஃப் பீசோஸிடம் அமேசான் நிறுவனத்தின் 12% பங்கும் நிர்வாக வாக்குத்திறன் உரிமையும் இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க:
டிடிவி தினகரனின் தகுதி என்ன?
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.