உலகை சுற்றி வருவது என்பது பலரது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால், இந்த கனவை மிக சிறிய வயதிலேயே ஒருவர் செய்து காட்டியுள்ளார். 17 வயது இளைஞரான மேக் ரதர்ஃபோர்ட் என்பவர் தான் இந்த உலக சாதனையை செய்துள்ளார். இவருக்கு விமானமும் ஓட்ட தெரியும் என்பது தான் அதில் சிறப்பான விஷயம். இவரது உலகை சுற்றும் பயணம் ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கியது, இவர் ஒரு சிறிய விமானத்தில் உலகம் முழுவதும் தனியாக பறந்து சாதனை படைத்துள்ளார். பெல்ஜியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற மேக் ரூதர்ஃபோர்ட், பல்கேரியாவின் தலைநகரான சோபியாவின் மேற்கு விமான நிலைய ஓடுபாதையில் தனது சாதனையை முடித்துள்ளார்.
ரதர்ஃபோர்ட் தனது இளம் வயதில் தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்ததோடு மட்டுமல்லாமல், சிறு வயதிலேயே மைக்ரோலைட் விமானத்தில் உலகைச் சுற்றி வந்தவரும் ஆவார். இந்த சாதனை குறித்து பேசிய அவர், எனது இந்த பயணம் ஏராளமான இளைஞர்கள் தங்களின் கனவுகளை தொடர ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் "உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள், நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், கடினமாக உழைத்து, உங்கள் இலக்குகளை அடைய முன்னோக்கிச் செல்லுங்கள்," என்று அவர் இந்த சாதனையை முடிக்கும் போது கூறினார். இவரது சகோதரியான, 19 வயது ஜாரா இது போன்ற உலக சாதனை ஒன்றை முடித்துள்ளார்.
மார்ச் 23 அன்று தொடங்கிய ரூதர்ஃபோர்ட்டின் பயணம், ஐந்து கண்டங்களில் உள்ள 52 நாடுகளை கடந்துள்ளது. விமானிகளின் குடும்பத்தில் பிறந்த ரூதர்ஃபோர்ட் 2020-இல் விமானத்தை ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றார். அவருக்கு அப்போது 15 வயதாக இருந்தது. வெப் ஹோஸ்டிங் நிறுவனமான ICDSoft, தான் இவருக்கு விமானத்தை கடனாக வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் பறக்கும் அவரது தனிப் பயணம் பல்கேரியாவில் தொடங்கியது. அவரது சகோதரியைப் போலவே, ரூதர்ஃபோர்ட் சிறப்பாக பயணம் செய்து சாதனையை படைத்துள்ளார். இவர் பயணம் செய்த விமானமானது உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றாகும், இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்ட கூடியது.
இதையும் வாசிக்க: நொய்டா கட்டடம் இடிப்பு.. ரூ.500 கோடி நஷ்டம்..! கட்டட ஓனர் புலம்பல்
இதில் பொதுவாக இரண்டு இருக்கைகள் இருக்கும். ஆனால், இதில் இரண்டாவது இருக்கைக்கு பதிலாக கூடுதல் எரிபொருள் டேங்குகள் அவரது நீண்ட பயணத்திற்காக மாற்றியமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்குள் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் உட்பட, எதிர்பாராத பல தடைகள் அவரது வழியில் இருந்ததால் பயணம் நீண்ட காலம் எடுத்து கொண்டது. இவரது விமானம் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா பகுதி வழியாக இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணித்தது.
இதையும் வாசிக்க: தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு
ரூதர்ஃபோர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் ஏராளமான மக்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவரது தந்தை சாம் ரூதர்ஃபோர்ட், தனது குழந்தைகளின் சாதனைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகக் கூறினார். இது போன்ற நிகழ்வு குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பின்பற்றுவதற்கும், பெற்றோர்கள் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஊக்கமளிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜாரா ரூதர்ஃபோர்ட், அவரது பயணத்தின் போது தனது இளைய சகோதரருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறினார். "எனது தம்பி விமானத்தில் பறக்கும் போது, நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் அவருக்கு உதவவும் முயற்சித்தேன்" என்றார். ரூதர்ஃபோர்ட்டின் இந்த சாதனை இன்று பல இளைய வயதினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Guinness, Record, Trending News