மீண்டும் திறக்கப்படும் மச்சு பிச்சு - குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

பெருவில் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பிரபல சுற்றுலா தளமான மச்சு பிச்சு ஜூலை ஒன்றாம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

மீண்டும் திறக்கப்படும் மச்சு பிச்சு - குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
மச்சு பிச்சு சுற்றுலா தளம்
  • Share this:
பெருவில் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பிரபல சுற்றுலா தளமான மச்சு பிச்சு ஜூலை ஒன்றாம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. 2500 அடி உயரமுள்ள மலை உச்சியில் அமைந்துள்ள மச்சு பிச்சுவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இங்கு ஒரு நாளைக்கு 3,000 பார்வையாளர்கள் வருகை தந்து வந்தனர். ஆனால் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மச்சு பிச்சுவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஒரு நாளைக்கு 675 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ள குஸ்கோ (Cuzco) பிராந்திய அதிகாரிகள், பயணிகள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading