ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கை அதிபர் ரணிலுடன் லைகா சுபாஷ்கரன் முக்கிய சந்திப்பு.. தமிழ் கைதிகள் குறித்து முக்கிய பேச்சு?

இலங்கை அதிபர் ரணிலுடன் லைகா சுபாஷ்கரன் முக்கிய சந்திப்பு.. தமிழ் கைதிகள் குறித்து முக்கிய பேச்சு?

இலங்கை அதிபர் ரணிலுடன் சுபாஷ்கரன் சந்திப்பு

இலங்கை அதிபர் ரணிலுடன் சுபாஷ்கரன் சந்திப்பு

இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் சுபாஷ்கரன் அதிபர் ரணிலிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiacolombo colombo

  இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பிரபல தொழிலதிபரும் சினிமா திரைப்பட தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் சந்தித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக லைக்கா திகழ்ந்து வருகிறது. ரஜினியின் 2.0, தர்பார் போன்ற படங்கள், அன்மையில் வெளியாகி வசூலை குவித்த பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம், கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

  இதன் நிறுவனர் சுபாஷ்கரன் இலங்கையைச் சேர்ந்தவராவார். இந்நிலையில், சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்புவில் நேற்று சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார். அந்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் சுபாஷ்கரன் அதிபர் ரணிலிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை ஏற்று 8 தமிழ் கைதிகளை பொது மன்னிப்பிலும், 4 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இலங்கை அரசு விடுவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

  இதற்கு அதிபர் ரணிலிடம் நன்றி தெரிவித்த சுபாஷ்கரன், மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் வலியுறுத்தியதாக தெரிகிறது. வரும் தைப் பொங்கலுக்கு மேலும் பல  கைதிகளை அரசு விடுவிக்கும் என அதிபர் ரணில் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: இங்கிலாந்து மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்... கணக்கெடுப்பில் தகவல்

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது. விடுதலையான அரசியில் கைதிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு லைக்கா ஞானம் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் தொகையை சுபாஷ்கரன் வழங்கினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Lyca, Ranil Wickremesinghe, Sri Lanka