ஹோம் /நியூஸ் /உலகம் /

ரூ.250 கோடிக்கு ஓனர்.. ஆனால் குடும்பத்துக்கே தெரியாது.. சீனாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்!

ரூ.250 கோடிக்கு ஓனர்.. ஆனால் குடும்பத்துக்கே தெரியாது.. சீனாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்!

லாட்டரி ஜாக்பாட்டை பெற்ற ‘லீ’ என்ற அந்த நபர், பின்னர், அந்த லாட்டரி பணத்தில் 5 மில்லியன் யுவான்களை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கினார்.

லாட்டரி ஜாக்பாட்டை பெற்ற ‘லீ’ என்ற அந்த நபர், பின்னர், அந்த லாட்டரி பணத்தில் 5 மில்லியன் யுவான்களை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கினார்.

லாட்டரி ஜாக்பாட்டை பெற்ற ‘லீ’ என்ற அந்த நபர், பின்னர், அந்த லாட்டரி பணத்தில் 5 மில்லியன் யுவான்களை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Internationa, IndiaChinaChina

  சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ. 250 கோடி விழுந்ததை தனது மனைவி மற்றும் குழந்தைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

  தெற்கு சீனாவில் ஒரு நபர் தனது 219 மில்லியன் யுவான் (ரூ.250 கோடி) லாட்டரி ஜாக்பாட்டை தனது மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து ரகசியமாக வைத்துள்ளார். ஏனெனில், பணம் அவர்களை சோம்பேறிகளாக ஆக்கக்கூடும் எனவும், அதனால்தான் இந்த தகவலை அவர்களிடம் இருந்து மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

  எல்லையில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்திவைப்பு : உலகப்போராக உருமாறுகிறதா உக்ரைன்- ரஷ்யா போர்?

  ‘லீ’ என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த நபர், குவாங்சியின் தெற்குப் பகுதியில் உள்ள நானிங்கில் அமைந்திருக்கும் லாட்டரி அலுவலகத்திற்குத் தனியாகச் சென்று தனது பரிசைப் பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. அவர் பரிசை ஏற்றுக்கொண்டதைக் காட்டும் புகைப்படங்களில், தான் யார் என்ற அடையாளத்தைக் காட்டாமல் மறைக்கும் வகையில் மஞ்சள் நிறத்திலான ஒரு பொம்மை தோற்ற உடையை அணிந்திருந்தார்.

  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் என் மனைவி மற்றும் குழந்தையிடம் இந்த தகவலைச் சொல்லவில்லை. லாட்டரியில் ஜாக்பாட் விழுந்துள்ளது என்று நான் கூறிவிட்டால், அவர்கள் மிகவும் மனநிறைவுடன் இருப்பார்கள். எதிர்காலத்தில் தங்களுக்காக பணி செய்ய மாட்டார்கள்; கடினமான உழைப்பை கையில் எடுக்காமல் அதனை அப்படியே மறந்துவிடுவார்கள்’ என்று அந்த நபர் கூறியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சாகச விரும்பிகளுக்கு குட் நியூஸ்! கண்டிப்பா இந்த ராட்சத ஊஞ்சல மிஸ் பண்ணிடாதீங்க!

  லாட்டரி ஜாக்பாட்டை பெற்ற ‘லீ’ என்ற அந்த நபர், பின்னர், அந்த லாட்டரி பணத்தில் 5 மில்லியன் யுவான்களை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கினார். பின்னர், மீதமுள்ள பணத்தை என்ன செய்வது என்பது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

  சீன நாட்டின் மத்திய அரசு, நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக பணம் திரட்ட லாட்டரிகளை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Archana R
  First published:

  Tags: China, Lottery