கடவுள் ராமர் ஒரு நேபாளி: அவர் இந்தியர் அல்ல.. நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து..

பிரதமர் சர்மா ஒலி

உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருப்பதாகவும் கடவுள் ராமர் இந்தியரே அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருப்பதாகவும் கடவுள் ராமர் இந்தியரே அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

  வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த கவிஞர் பானுபகத்தாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, கலாச்சார ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் தங்களது நாட்டின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

  இந்திய இளவரசருக்கு நாம் சீதையை மணமுடித்துக் கொடுத்திருப்பதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், அயோத்தியை சேர்ந்த இளவரசனுக்கு தான் சீதையை கொடுத்தோமே தவிர இந்தியாவுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

  Also read... மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் - வருடத்தை கணித்த ஐ.நா

  மேலும் உண்மையான அயோத்தி என்பது நேபாளத்தின் தெற்கே உள்ள தோரி பகுதிதான் என்றும் பிரதமர் சர்மா ஒலி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: