• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பழுதாகி பாதியில் நின்ற வரலாற்று சிறப்பு மிக்க லண்டன் டவர் பிரிட்ஜ்.. (வீடியோ)

பழுதாகி பாதியில் நின்ற வரலாற்று சிறப்பு மிக்க லண்டன் டவர் பிரிட்ஜ்.. (வீடியோ)

வரலாற்று சிறப்பு மிக்க டவர் பிரிட்ஜ்

வரலாற்று சிறப்பு மிக்க டவர் பிரிட்ஜ்

800 அடி நீளமும் 213 அடி உயரமும் கொண்ட டவர் பிரிட்ஜ் 1886-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1894-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

  • Share this:
    லண்டனில் புகழ்பெற்ற டவர் பாலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதாகி பாதியில் நின்றது.

    தேம்ஸ் நதிக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். மேல் பரப்பில் பேருந்து போக்குவரத்தும், கப்பல் வரும்போது திறந்து மூடும் வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கப்பல் வரும்போது திறந்த பாலம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூடாமல் போனது. இதனால் வழக்கமாக அவ்வழியே செல்லும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தை சீராக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.ஒரு மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

     



    800 அடி நீளமும் 213 அடி உயரமும் கொண்டது இந்த பாலம். 1,886-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1,894-ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: