முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு

மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு

சுவாமி விவேகானந்தரின் சிலை

சுவாமி விவேகானந்தரின் சிலை

தென் அமெரிக்காவில் நிறுவப்படும் முதல் சுவாமி விவேகானந்தரின் சிலை இதுவே ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

  • தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் முதன் முதலில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்துள்ளார்.
  • இந்தியப் பாராளுமன்ற மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா மெக்சிகோவிற்கு நட்பு முறையில் பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகையில் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் எல்லை மற்றும் நேரம் கடந்து செல்லும். இந்த சிலை இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தோற்றுவிக்கும். இதை நான் இங்குத் திறப்பதில் மிகவும் கௌரவமாக உள்ளது என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் மெக்சிகோவில் உள்ள சாபிங்கோ பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் பாண்டுரங் கான்கோஜே மார்பளவு சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மெக்சிகோ நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் மெக்சிகோ உடனான நட்பு ரீதியான உறவை மேம்படுத்தவும், இருநாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இருநாட்டிற்கு இடையே உள்ள நட்பை அதிகரிப்பதாக அமைத்துள்ளது.

    Also Read : பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளக்காடான 110 மாவட்டங்கள் - 1200-ஐ தாண்டிய உயிரிழப்பு

    மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் மெக்சிகன் பாராளுமன்றம் வளாகத்தில் இந்தியா - மெக்சிகோ நட்புக்கான பூங்கா அமைக்கப்பட்டது. அதனைச் சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கிவைத்தார். இதனையடுத்து இந்தியாவுடனான நட்பை மேம்படுத்தும் மெக்சிகோ பாராளுமன்றம் தலைவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

First published:

Tags: Loksabha, Mexico, Om Birla, Swami Vivekananda