சோமாலியா நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... விவசாயிகள் வேதனை

சோமாலியா நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து தாவரங்களை உண்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சோமாலியா நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... விவசாயிகள் வேதனை
சோமாலியா நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
  • News18 Tamil
  • Last Updated: November 10, 2020, 10:45 PM IST
  • Share this:
சோமாலியா நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தலைநகர் மொகாடிசு அருகேயுள்ள டேநைல் (Daynile) பகுதியில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அங்குள்ள தாவரங்களை அழித்து வருகின்றன.

பொதுவாக, வெட்டுக்கிளிகள் தம் வசிப்பிடங்களில் வறட்சி, வெப்பமாக இருக்கவேண்டும் என விரும்பும் என்றும் அதன் காரணமாக அவை பாலைவனங்கள், உலர்ந்த படிவங்களில் வசிக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலபொது இவை விவசாயத்துக்கு பெரும் வில்லனாக மாறிவிடுகின்றன.அந்த வகையில், சோமாலியாவில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால், அவற்றை விரட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். பாத்திரத்தில் ஒலி எழுப்பினாலும், டிரோன் மூலம் மருந்து தெளிப்பதாலேயே வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே கொரோனா பரவலை சமாளிக்க சோமாலிய அரசு போராடி வரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அரசுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading