பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், இந்த பெருந்தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கோவிட் zநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டின் உள்ளூர் அரசாங்கங்கள் முடுக்கி விட்டுள்ளன. தொற்று பரவலை கருத்தில் கொண்டு சீனாவின் பல மாகாணங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சீனாவின் ஜெங்சோவ்(Zhengzhou) நகரில் அமல்படுத்தப்பட்டு உள்ள லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அந்த பகுதியில் அமைந்துள்ள பல முக்கிய ஆலைகளின் செயல்பாடுகளை பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. முக்கியமானதில் ஐபோன் ஆலையும் ஒன்று.
ஜெங்சோவ்(Zhengzhou) என்பது மத்திய சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். மேலும் இது ஹெனன் என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதனிடையே Foxconn டெக்னாலஜி குழுமத்தின் முக்கிய மற்றும் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அருகில் உள்ள சில பகுதிகளுக்கு சீன நகரமான Zhengzhou லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. எனவே Apple Inc. நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியில் மேலும் சிக்கல் ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
சீன சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மான WeChat-ல் ஷேர் செய்யப்பட்ட அறிக்கையின்படி, Zhengzhou விமான நிலைய பொருளாதார மண்டலத்தில் (Zhengzhou Airport Economy Zone) உள்ள சில பகுதிகள் மக்கள் வெளியேற அனுமதிக்கப்படாத குவாரன்டைனின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பகுதி மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். Zhengzhou விமான நிலைய பொருளாதார மண்டலம் உலகின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலையின் தாயகமாக உள்ளது.
இந்நிலையில் நாட்டில் அவ்வப்போது ஏற்படும் மிகப்பெரிய COVID-19 பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் கீழ் Zhengzhou நகரின்சில முக்கிய பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் Foxconn-ன் Zhengzhou நகரத்து ஆலையில் உள்ள ஊழியர்கள் ஏற்கனவே கட்டாய COVID-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன்கள் ஐபோன் அலையின் செயல்பாடுகளை கடினமாக்கலாம் அல்லது சில நாட்கள் ஆலையை மூட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
Zhengzhou நகரில் விதிக்கப்பட்டுள்ள சமீபத்திய கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது செயல்பாடுகள் பாதிக்குமா என்பது குறித்த இமெயில் வழி கேள்விகளுக்கு Foxconn மற்றும் Apple உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும் Zhengzhou பகுதியில் உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலைகள் வழக்கம் போல் இயங்குவதாக சைனா செக்யூரிட்டீஸ் ஜர்னல் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே சக ஆப்பிள் சப்ளையர்களான Pegatron Corp. மற்றும் Quanta Computer Inc. ஆகிய நிறுவனங்கள் உள்ளூர் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு இணங்க கிழக்கு சீனாவில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.