ஹோம் /நியூஸ் /உலகம் /

லிஸ் டிரஸ் ராஜினாமா..பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? 

லிஸ் டிரஸ் ராஜினாமா..பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? 

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரதமருமான லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா செய்ததையடுத்து அதிபர் பதவியில் இருக்கை காளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaBritianBritian

பிரிட்டன் வரலாற்றில் மிகவும் குறைந்த காலத்தில் பதவியிலிருந்த பிரதமராக லிஸ் டிரஸ் ஆகியுள்ளார். பதிவியேற்று 45 நாட்களே ஆன நிலையில் தற்போது அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ள காரணத்தினால் லிஸ் டிரஸ்யை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக் அடுத்து கட்சியின் தலைவரும் பிரிட்டன் பிரதமரும் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீண்டும் தலைவர் ஆகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைவரான பென்னி மோர்டான்ட்- விற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முறை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அடுத்து அடுத்து பதவி விலகும் பிரதமர்கள், கட்சியில் ஒற்றுமை இல்லாமல் போவது, பொருளாதார நெருக்கடி, பணமதிப்பு வீழ்ச்சி போன்றவை பாராளமன்றத்தில் கட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பலையை எழுப்பியுள்ளது.

Also Read : தீ விபத்தில் தரைமட்டமாக மசூதி கோபுரம்- வீடியோ காட்சி

போரிஸ் ஜான்சன் பதவி விலகல், 45 நாட்களில் லிஸ் டிரஸ் ராஜினாமா, உள்துறை மந்திரி சுயெல்லா பிரேவர்மேன் பதவி விலகல் மற்றும் நிதி அமைச்சர் குவாசி குவார்டெங் பதவி மாற்றம் போன்றவை பிரிட்டன் அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிஸ் டிரஸ் கொண்டுவந்த வரி குறைப்பு கொள்கை, அவர் எதிர்பார்த்ததை அளிக்காமல், ஏற்கனவே சரிவாக இருந்த பொருளாதாரத்தை மேலும் சரிய வைத்துள்ளது. லிஸ் டிரஸ்யின் கொள்கைகளைக் கட்சியில் உள்ளவர்களே எதிர்த்து வரும் நிலையில் எதிர்க் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டனில் உடனடி பொதுத் தேர்தல் நடத்தக் கோரியுள்ளார்.

First published:

Tags: Britain, Prime minister