Home /News /international /

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு

Liz Truss - கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் வாக்களித்து புதிய பிரதமராக லிஸ் டிராஸை தேர்வு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondonLondon
    பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ் இன்று பதவியேற்கிறார். அந்நாட்டில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ஊழல் புகார்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

    இதனை தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைவரையும் புதிய பிரதமரையும் தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல்கள் நடைபெற்று வந்தன. இந்த தேர்தல்களில் 8 பேர் போட்டியிட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் டிரஸ்-சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர்.

    இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி லிஸ் டிரஸ் 81 ஆயிரத்து 326 வாக்குகளும் அவரை எதிர்த்து களம் கண்ட ரிஷி சுனக் 60 ஆயிரத்து 399 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லிஸ் டிரஸ் பிரிட்டன் நாட்டின் 56ஆவது பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். மார்க்ரெட் தச்சர் மற்றும் தெரேசா மேவுக்கு அடுத்து அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் 3ஆவது பெண் இவரே.

    இதையும் படிங்க: அர்ஜென்டினா துணை அதிபர் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. பரபரப்பு காட்சிகள்!

    பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரசுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரசுக்கு எனது வாழ்த்துகள். என்றும் உங்கள் தலைமையின் கீழ் இந்தியா-பிரிட்டன் உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.


    புதிய பொறுப்புகள் சிறப்பாக அமைய டிரஸ்-சுக்கு வாழ்த்துக்கள்" என்றும் மோடி தெரிவித்துள்ளார். அதேபோல் போரிஸ் ஜான்சன் மற்றும் ரிஷி சுனாக் ஆகியோரும் புதிய பிரதமர் லிஸ்சுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Boris johnson, Britain, PM Modi, Prime minister, UK

    அடுத்த செய்தி