Home /News /international /

இங்கிலாந்தின் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு - ரிஷி சுனக்கை வீழ்த்தி வெற்றி!

இங்கிலாந்தின் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு - ரிஷி சுனக்கை வீழ்த்தி வெற்றி!

இங்கிலாந்தின் 56வது பிரதமர் லிஸ் டிரஸ்

இங்கிலாந்தின் 56வது பிரதமர் லிஸ் டிரஸ்

இங்கிலாந்தின் 56வது பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaUnited KingdomUnited KingdomUnited Kingdom
    இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20,000 வாக்குகளை அதிகம் பெற்று தன்னை எதிர்த்து நின்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து நாட்டில் கான்செர்வேவ் கட்சி ஆட்சியில் உள்ளது. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து தற்போது புதிய பிரதமரைத் தேர்ந்து எடுக்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் போட்டியிட்டனர்.

    இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அடுத்த கான்செர்வேவ் கட்சி தலைவர் யார் மற்றும் பிரதமராகப் போவது யார் என்ற பதற்றம் நீடித்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதில் தன்னை எதிர்த்து நின்ற ரிஷி சுனக்கை தோற்கடித்து 57.4% வாக்குகள் பெற்று இங்கிலாந்தின் 56வது பிரதமராக வெற்றிபெற்றுள்ளார்.



    இங்கிலாந்து வரலாற்றில் பிரதமராகப் பெண் தேர்வு செய்யப்படுவது மூன்றாவது முறையாகும். இந்த நிலையில் பிரதமரான அவர் நாட்டின் பொருளாதாரம், பண வீக்கம் மற்றும் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக லிஸ் டிரஸ் கூறினார்.

    Also Read : ரஷ்யா உக்ரைன் போரைக் காட்சிப்படுத்திய பத்திரிக்கையாளர் - விசா டி'ஓர் விருது வழங்கி கௌரவம்!

    இதனையடுத்து லிஸ் டிரஸ், ராணி எலிசபெத்தைச் சந்திப்பார். நாளை ராணி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ்-க்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி டிரஸ் தலைமையில் இங்கிலாந்து உடனான நட்பு மேலும் உறுதி பெரும் என்று கூறியுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Election, England, Prime minister

    அடுத்த செய்தி