Home /News /international /

இடி அமீன் முதல் கோத்பய ராஜபக்சே வரை... மக்கள் எதிர்ப்பால் நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள்!

இடி அமீன் முதல் கோத்பய ராஜபக்சே வரை... மக்கள் எதிர்ப்பால் நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள்!

நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள்

நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பால் இதே போன்று நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரிகள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பால் இதே போன்று நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரிகள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்

    இடி அமீன்

    இடி அமீன்


    ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை 1971 முதல் 1979 வரை ஆண்டவர் இடி அமீன். 'உகாண்டாவின் கசாப்புக்காரன்' என்றழைக்கப்பட்ட அவர் அந்நாட்டு மக்கள் 3 லட்சம் பேர் உயிரிழக்க காரணமானவர். 1979- ஆம் ஆண்டு அப்போதைய லிபிய அதிபர் கடாஃபியுடன் இணைந்து ஏர் பிரான்ஸ் விமானத்தை கடத்தியதாகவும் இடி அமீன் மீது குற்றச்சாட்டு உள்ளது. 1978-ல் துனிஷியா மீது இடி அமீன் போர் தொடுத்தார். ஆனால் அப்போரில் தோல்வியடைந்த அவர் மக்களின் கோபத்திற்கு ஆளானார். மக்கள் எதிர்ப்பால் அவர் நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். 2003- ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

    முகமது ரெசா பால்வி:

    முகமது ரெசா பால்வி:



    ஷா ஆஃப் ஈரான்
    என தன்னை தானே வர்ணித்துக்கொண்ட முகமது ரெசா பால்வி, ஈரானை 1941 முதல் 1979 வரை ஆட்சி புரிந்தார். தீவிர அமெரிக்க ஆதரவாளரான அவர், ஈரானில் வெள்ளை புரட்சிக்கு வித்திட்டவர். அவரின் அமெரிக்க ஆதரவு கொள்கை ஈரானில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. 1978-ல் அயதுல்லா கொமேனி தலைமையில் ஈரான் புரட்சி ஏற்பட்டது. மக்கள் கிளர்ச்சி காரணமாக பால்வி நாட்டை விட்டு வெளியேறி ஏகிப்தில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து மோரொக்கா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணித்தார். இறுதியில் அமெரிக்காவில் உயிரிழந்தார்

    ஃபெர்டினாட் மார்கோஸ்:

    ஃபெர்டினாட் மார்கோஸ்:


    1965 முதல் 1986 வரை பிலிப்பைன்ஸின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்தவர் ஃபெர்டினாட் மார்கோஸ். அவரின் ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுக்களால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கியது., எதிர்க்கட்சியினரை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. 1986- ல் மக்கள் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மார்கோஸ். அமெரிக்காவில் மரணமடைந்தார்.

    ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா:

    ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா:


    ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா கியூபாவை இரு முறை ஆட்சி செய்தார். அவரின் 1933 முதல் 1944 வரையிலான முதல் ஆட்சியின் போது, சிறந்த நிர்வாகத்தை அளித்ததாக கூறப்படுகிறது. எனினும் 1952 முதல் 1959 வரையிலான இரண்டாம் முறை ஆட்சியின் போது, அவர் அரசின் பெரும் தொகையை கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சர்வாதிகாரியாக மாறிய பாடிஸ்டா 1954 மற்றும் 1958 தேர்தல்களில் அவர் மட்டுமே போட்டியிட்டார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையலான புரட்சியில் வீழ்ந்தார். உயிருக்கு அஞ்சி டோமினிக்கன் குடியரசில் தஞ்சம் புகுந்தார்

    சைன் அல்-அபிடின்:



    துனிஷியாவின் சைன் அல்-அபிடின் 1987 மதல் 2011 வரை அதிபராக இருந்தார். மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக சக்திகளை அடக்கியதற்காக அவர் விமர்சனத்திற்கு உள்ளானார். போதைப்பொருள் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அரபு வசந்த காலத்தில் நடந்த மல்லிகைப் புரட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியா சென்றார். அவர் துனிசியாவில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பல வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2019 இல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இறந்தார்.

    நந்தசேன கோத்தபய ராஜபக்சே

    நந்தசேன கோத்தபய ராஜபக்சே


    கோத்தபய ராஜபக்சே 1971 இல் இலங்கை ராணுவத்தில் இணைந்து பல போர்களில் கலந்துகொண்டார். ஈழப்போரின் போது கஜயா படையில் இருந்து செயல்பட்டார். பின் அமெரிக்கா சென்று தொழில்நுற்ப படிப்பை மேற்கொண்டார். 2005 தில் தன சகோதரர் மஹிந்த ராஜபக்சே அரசின் கீழ் பாதுகாப்பு துறை செயலாளராக பணியாற்றினார். 2019 தேர்தலில் வென்று இலங்கையின் குடியரசுத் தலைவரானார். இலங்கையின் நிதிநிலை பெரிதும் வீழ்ந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Gotabaya Rajapaksa, Srilanka, Srilankan govt

    அடுத்த செய்தி