கானா நாட்டில் உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி வந்தவரை சிங்கங்கள் அடித்துக் கொன்றுள்ளன. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் சிங்கங்களும் உள்ளன. இந்த சிங்கங்களில் ஒரு ஜோடி கடந்த நவம்பர் மாதம் அரிய வகை வெள்ளை சிங்கக் குட்டிகளை ஈன்றுள்ளது.
உயிரியல் பூங்காவிற்கு வருபவர்கள் அனைவரும் இந்த வெள்ளை சிங்கக் குட்டிகளை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை கானா நாட்டில் நடு வயது மதிக்கத்தக்க நபர் திடீரென்று பார்வையாளர் பகுதியில் இருந்து வெளியேறி தடுப்பு வேலியை தாண்டி இந்த சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் வந்துள்ளார். ஆண் சிங்கமும், பெண் சிங்கமும், அதன் இரு குட்டிகளும் அங்கு இருந்துள்ளன. தங்கள் பகுதிக்குள் ஆள் ஒருவர் வருவதை பார்த்ததும் புதிய குட்டிகளை வைத்திருக்கும் இந்த சிங்கங்கள் அவர் மீது பாய்ந்து தாக்கி கடித்து குதறியுள்ளன. இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் கண்டெடுப்பு..! - 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என தகவல்
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "தடுப்பு வேலியை தாண்டி சென்ற இந்த நபர் வெள்ளை சிங்கக் குட்டிகளை திருடும் நோக்கில் தான் உள்ளே சென்றிருப்பார் என கருதுகிறோம். பொதுவாக புதிய குட்டிகளை ஈன்ற சிங்கங்கள் தங்கள் குட்டிகளுக்கு அருகே யாரேனும் வந்தால் தாக்குதல் நடத்துவது இயல்பு. எனவே தான் நாங்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை தொடர்ந்து வருகிறோம்" என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lion, Man killed, Wild Animal