மத்திய இஸ்ரேலில் ராம்லா எனும் பகுதிக்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் சுமார் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது மத்திய பேலியோலிதிக் சகாப்தத்திற்கு முந்தைய பல எலும்பு துண்டுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்பு துண்டுகளில் ஒன்று மட்டும் பக்கவாட்டில் ஆறு இணையான பொறிப்புகளைக் கொண்டிருந்தன. லெவண்டில் ஒரு வகையான செய்தியிடலுக்கு பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான எடுத்துக்காட்டாக இது இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும் இது மனிதர்கள் பயன்படுத்திய வரலாற்றுக்கு முந்தைய சின்னங்களின் முதல் சான்று எனவும் தெரிவித்துள்ளனர்.
வல்லுநர்கள் இதனை ஒரு குறியீட்டு சான்றாகவும் அல்லது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். இந்த எலும்புகள் அரோச் அல்லது யூரஸ் காலத்தில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவை, ஒரு காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பொதுவாக காணப்பட்ட அழிந்துபோன கால்நடைகள் ஆகும். தற்போது இந்த கண்டுபிடிப்புகள் குவாட்டர்னரி இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த அடையாளங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பாக வலது கையால் செய்யப்பட்டவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரே அமர்வில் ஒரு ஃபிளின்ட் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில், பேலியோலிதிக் காலத்தில் தான் மனிதர்கள் முதன் முதலில் குறியீட்டு சின்னங்களை பயன்படுத்தினர் என்று கூறப்பட்டது. இந்த கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில் இந்த கண்டுபிடுப்புகள் அமைந்துள்ளன. சைன்டிபிக் இதழின் கூற்றுப்படி, எலும்பில் காணப்பட்டுள்ள வேலைப்பாடுகள் குறியீட்டு நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட எலும்பின் தேர்வானது வேட்டை சமூகத்தில் அந்த விலங்கின் நிலையுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து, எபிரேய பல்கலைக்கழக தொல்பொருள் நிறுவனத்தின் டாக்டர் யோசி ஜைட்னர் கூறியதாவது, ராம்லாவுக்கு அருகிலுள்ள இடம் பாலியோலிதிக் வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்ட விலங்குகளை அறுக்கும் ஒரு முகாமாகவும் அல்லது சந்திப்பு இடமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பூமியில் இதுவரை கண்டிராத மிகப் பழமையான குறியீட்டு வேலைப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சொல்வது மிகவும் நியாயமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஹைஃபாசைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஐரிஸ் க்ரோமன்-யாரோஸ்லாவ்ஸ்கி ஆய்வின் அடிப்படையில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் மக்கள் இதுபோன்ற செதுக்கல்களை உருவாக்க ஃபிளின்ட் ராக் மூலம் உருவாக்கப்பட்ட கூர்மையான கருவியைப் பயன்படுத்தியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
எலும்புத் துண்டுகளில் உள்ள அடையாளங்களை கண்டறிய அவை 3-டி இமேஜிங் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள செதுக்கலைகள் 38 மி.மீ முதல் 42 மி.மீ வரை நீளம் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. செதுக்கல்களுக்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான செய்தியும் அர்த்தமும் இருப்பதாகவும், மேலும் அந்த வேலைப்பாடுகள் ஒருவித கவனக்குறைவான டூட்லிங் என்பதால் அவர்கள் அதை நிராகரித்திருப்பதாகவும் எபிரேய பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மரியன் ப்ரெவோஸ்ட் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Archeological site, Israel, Scientist