தொடர் மின்னல் தாக்குதல்: திருமணத்தில் பங்கேற்றவர்கள்16 பேர் பலி!

மின்னல்

அப்போது, அந்த பகுதியில்  அடுத்தடுத்து மின்னல்கள் தாக்கியுள்ளன. இதில், 16 பேர் வரை உயிரிழந்தனர்.  மாப்பிள்ளை படுகாயம் அடைந்தார்.

 • Share this:
  வங்கதேசம் நாட்டில் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் மீது மின்னல்கள் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

  இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில்  பெய்துவரும் பருவமழை இந்த ஆண்டு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.   காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக சூறாவளிக் காற்றுடன் பெய்துவரும் கனமழையால் 6 ரோஹிங்கியா அகதிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சில்  உள்ள  சிப்கஞ்சி என்னும் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், கனமழையுடன் மின்னல்களும் தாக்கியுள்ளது இதையடுத்து, சிலர் தங்கள் படகில் இருந்து இறங்கி ஒதுங்கியுள்ளனர்.

  மேலும் படிக்க: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத் தாழ்வு: உலக சுகாதார நிறுவனம்!


  அப்போது, அந்த பகுதியில்  அடுத்தடுத்து மின்னல்கள் தாக்கியுள்ளன. இதில், 16 பேர் வரை உயிரிழந்தனர்.  மாப்பிள்ளை படுகாயம் அடைந்தார். மணப்பெண் சம்பவ இடத்தில்  இல்லாததால் அவர் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பினார்.

  இதையும் படிங்க: இந்தியாவில் மின்னல் தாக்குதல் 34% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!


  ஆண்டுதோறும் வங்கதேசத்தில் மின்னல் தாக்குதலால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.  கடந்த 2016ம் ஆண்டில் மின்னல் தாக்குதல் காரணமாக 200 பேர் அங்கு உயிரிழந்தனர். அதிகபட்சமாக மே மாதத்தின் ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Murugesh M
  First published: