அமேசான் காட்டுத்தீக்கு நான் காரணமா?- மறுக்கும் டைட்டானிக் நாயகன்!

நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியானார்டோ தான் தனது தொண்டு அமைப்பின் மூலம் அமேசான் காடுகளை எரிக்கச் சொல்லி நிதி அளித்ததாக அதிபர் கூறியுள்ளார்.

அமேசான் காட்டுத்தீக்கு நான் காரணமா?- மறுக்கும் டைட்டானிக் நாயகன்!
லியோனார்டோ டிகாப்ரியோ
  • News18
  • Last Updated: December 2, 2019, 1:07 PM IST
  • Share this:
அமேசான் காட்டுத்தீயின் பின்னனியில் அதற்கான நிதி உதவியை அளித்து சதி செய்ததே ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோதான் என பிரேசில் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. சர்வதேச சூழலியில் பிரச்னையாகக் கருதப்பட்ட இந்தக் காட்டுத்தீக்கு பின்னனியில் டைட்டானிக் கதாநாயகன் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ லியானார்டோ மீது குற்றம் சுமத்தியுள்ளார்.


நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியானார்டோ தான் தனது தொண்டு அமைப்பின் மூலம் அமேசான் காடுகளை எரிக்கச் சொல்லி நிதி அளித்ததாக அதிபர் கூறியுள்ளார். ஆனால், அதிபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லியானார்டோ, “இந்தச் சுற்றுச்சூழலில் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவர்கள் உடன் நான் என்றும் இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: ஹாங்காங் தலைமையின் மெத்தனத்தால் வலிமை பெறும் போராட்டங்கள்..!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்