பெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அரசு ராஜினாமா செய்துள்ளது.

பெய்ரூட் வெடிவிபத்து: வீதியில் இறங்கிய மக்கள்: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு
லெபனான் போராட்டம்
  • Share this:
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதில், 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 6,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இந்த பெரும் வெடிவிபத்தில் ஏறக்குறைய 3,00,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். உலக வரலாற்றில் நடைபெற்ற வெடிவிபத்தில் மிகப் பெரும் வெடிவிபத்தாக இந்த துயரச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பெரும் விபத்தைத் தொடர்ந்து அரசைக் கண்டித்து மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அந்நாட்டின் பிரதமர் டியாப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் டியாப் தலைமையிலான அரசு மொத்தமாக பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading