'என் நாட்டை விட்டுவிடுங்கள்’- ஐஎஸ்ஐஎஸ்-யிடம் சிறிசேனா வேண்டுகோள்!

சிறிசேனா (Image: Reuters)

ரம்ஜான் மாதம் தொடங்கும் முன்னர் இலங்கையில் மீண்டும் ஒரு கொடூரத் தாக்கதல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
”என் நாட்டை விட்டுவிடுங்கள்” என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அதிபரின் வேண்டுகோள் குறித்து ராய்டர்ஸ் நிறுவனம் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அதிபர் தன்னுடைய நாட்டை அமைதியாக விட்டுவிடுமாறு வேண்டுகோள் வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஎஸ் அமைப்பு இம்முறை சிறிய நாடுகளைக் குறிவைத்துத் தாக்கலாம் என்றும் சிறிசேனா எச்சரித்துள்ளார்.

ரம்ஜான் மாதம் தொடங்கும் முன்னர் இலங்கையில் மீண்டும் ஒரு கொடூரத் தாக்கதல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுவதால் இலங்கை அரசு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. ராய்டர்ஸிடம் சிறிசேனா கூறியிருப்பதாவது, “ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறிய குழு வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். ஈஸ்டர் தினத்தின் போது வெடித்த குண்டு உள்ளூரில் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘ஸ்கை நியூஸ்’ நேர்காணலில் “எங்கள் நாட்டை விட்டுவிடுங்கள்” என நேரலையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

மேலும் பார்க்க: கீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை... இலங்கை குண்டுவெடிப்புக்கு தொடர்பா?
Published by:Rahini M
First published: