• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • International Youth Day: இன்று சர்வதேச இளைஞர் தினம்.. முதன் முதலில் எப்போது இந்த தினம் கொண்டாடப்பட்டது?

International Youth Day: இன்று சர்வதேச இளைஞர் தினம்.. முதன் முதலில் எப்போது இந்த தினம் கொண்டாடப்பட்டது?

சர்வதேச இளைஞர் தினம்

சர்வதேச இளைஞர் தினம்

சர்வதேச இளைஞர்கள் தினம் முதன் முதலில் 1999ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.அன்று முதல் இன்று வரை ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Share this:
சர்வதேச இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக இதனை உலகநாடுகள் கொண்டாடுகின்றன. மேலும் இந்த வருடத்திற்கான இளைஞர்கள் தின கருப்பொருள் "உணவு அமைப்புகளை மாற்றுவது: மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்கான இளைஞர் கண்டுபிடிப்பு"  என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், உணவு முறைகளை மாற்றுவதில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் தாக்கத்தை முன்னிலைப்படுத்துவதாகும். இந்த கருப்பொருள், நம் கிரகத்தை நாம் ஒன்றாக இணைந்து காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் யோசனைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இளைய சமுதாயத்தினரின் அவசியம் குறித்து மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தினம் தோன்றிய வரலாறு:

சர்வதேச இளைஞர்கள் தினம் முதன் முதலில் 1999ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு சர்வதேச இளைஞர்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய குழுவுடன் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை இணைந்து கொண்டாடிவருகிறது.இன்றைய கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ள விவாதம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கலந்துரையாடலில் இளைஞர்கள் ஈடுபடும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அரங்கேற்றப்படும். உலகம் முழுவதும் இளைஞர்கள் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை அங்கீகரிப்பதற்கு இந்த தினம் உருவாக்கப்பட்டது.



இந்த தினத்தின் முக்கியத்துவம்:

இன்றும் கூட, பல மூன்றாம் நிலை உலக நாடுகளில் வாழும் இளைஞர்கள் தங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை விவாதிக்கவும், வரும் நாட்களில் இது போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக சமாளிக்க உதவும் திட்டங்கள் மற்றும் யோசனைகளை கொண்டு வரவும் இளைஞர்களுக்கான அடித்தளத்தை இந்த நாள் அமைத்து தருகிறது.



இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்கும் இன்னல்கள், இதனால் பாதிக்கப்படும் அவர்களின் மனநலம் குறித்த முக்கியமான விவாதங்களும் இன்றைய தினத்தில் பேசப்படுகின்றன மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புதுமையான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தொடரும் தொற்றுநோய் காரணமாக பல நாடுகளால் இளைஞர்கள் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. இருப்பினும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல்வேறு நிறுவனங்கள் இன்றைய தினத்தில் விவாதங்கள், பிரச்சாரங்கள் மற்றும் பேச்சுக்கள் போன்ற நிகழ்ச்சிகளை விர்ச்சுவல் முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: