Home /News /international /

அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி பழங்குடி மனிதன் - 20 வருடம் தனியாக வாழ்ந்த நிலையில் மரணம்

அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி பழங்குடி மனிதன் - 20 வருடம் தனியாக வாழ்ந்த நிலையில் மரணம்

 பழங்குடி மனிதன்

பழங்குடி மனிதன்

அமேசான் காட்டில் உள்ள ஒரு பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் தற்போது இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அவரின் இந்த இறப்பு தற்போது உலகளவில் செய்தியாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaBrazil Brazil Brazil Brazil
    உலகின் மிக முக்கியமான பெரிய காடான அமேசான் காட்டில்  100க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் உள்ளது. அதில் ஒரு இன கூட்டத்தில் ஒருவராக இருந்த இவர் பின்னர் அந்த கூட்டத்தின் உயிர் பிழைத்த ஒரே ஆளானார். பிரேசிலியன் அமேசான் காட்டுப் பகுதியில் இருபது வருடங்களாகத் தனியாக வாழ்ந்து வந்தவர் இவர். இவரின் மொத்த கூட்டத்தையும் அமேசான் பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் ஆட்களை வைத்து துப்பாக்கியால் கொன்றுவிட்டனர். அதிலிருந்து தப்பிய ஒரே ஆளாக இவர் தனியாக வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

    காடுகளில் விளையும் பழம், காய்களை உணவாக எடுத்துக்கொண்டும் வேட்டையாடியும் இவரின் வாழ்க்கை சென்றுள்ளது. இவரை "துளை மனிதன்" (man of the hole) என்று அழைக்கின்றனர். இந்நிலையில்,  கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் இறந்த நிலையில் தனாரு பூர்வீகப் பிரதேசம் ( Tanaru Indigenous Territory) என்ற இடத்தில்  இஅவரை கண்டறிந்துள்ளனர். இவரின் உடல் மேல் குவாக்காமாயா என்ற பறவையின் இறக்கை போர்வையாக மூடப்பட்டு இருந்தது. மேலும் அவர் இயற்கையான முறையில் தான் இறந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

    "துளை மனிதன்" முதலில் கண்டறியப்பட்டது எப்படி:



    இப்படி ஒரு தனி பழங்குடி மனிதன் பிரேசிலியன் அமேசான் காட்டு பகுதியில் வசிப்பது உலகிற்கு முதலில் தெரியவந்தது  ஒரு ஆவணப்படத்தின் (documentary) மூலம் தான். 1996இல் தனாறு காட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமல் படுத்த அங்கு இன்னும் பழங்குடியினர் வாழ்கின்றனர் என்று நிறுவிக்கப்பதற்காக ஒரு குழு ஆவணப்படம் எடுக்க அங்குச் சென்றனர். அப்போதுதான் இவரை முதன் முதலில் அந்த குழு பார்த்தது. பின்னர் இவரின் இன கூட்டத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுவிட்டனர் என்பது தெரியவந்தது.

    Also Read : விமானத்தை கடத்தி கட்டிடத்தில் இடிக்க போவதாக மிரட்டல்.. பரபரப்பு வீடியோ

    ஆனால் அந்த மனிதர் இவர்களுடன் பேச ஒப்புக்கொள்ளவில்லை. அவரின் பார்வை மிகவும் கோபத்துடன் வீரியமாக இருந்தது. அப்போது ஆவண குழு பேச முயற்சிக்கையில் அவர் இவர்கள் மேல் அம்பு எய்தினார். அதில் குழுவில் ஒருவர் பலத்த காயம் அடைத்தார். எனவே இவருக்கு "துளை மனிதன்" வந்தது.



    2009இல் "கொரும்பியாரா" என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஃபனாய் என்று அழைக்கப்படும் தேசிய இந்தியன் அறக்கட்டளை என்ற அரசு அமைப்பு அந்த மனிதரிடம் பேச ழங்குடி நபர் ஒருவரை  கூட்டிக்கொண்டு சென்றனர். அப்போது அவர் யாரிடமும் பேசப் போவது இல்லை என்று கூறியுள்ளார். தனியாக இருப்பதையே விருப்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து ஃபனாய் அவ்வப்பொழுது கண்காணித்து வந்துள்ளது. அப்போது கடைசியாக 2011ம் ஆண்டு இவர் மரத்தை வெட்டிக்கொண்டிருந்த காட்சிப் பதிவானது. ஆனால் அது 7 வருடம் கழித்தே வெளியிடப்பட்டது. அதைத் தவிர்த்து அவரின் வீடு, அவர் உருவாக்கிய தோட்டம் மற்றும் அவரின் இருப்பிடத்தைச் சுற்றி இருக்கும் குழிகள் போன்றவை பதிவானது. அவரின் தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அவரே விவசாயம் செய்துள்ளார். தற்போது அவர் இறந்த செய்தி உலகளவில் பரவிவருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Amazon Forest, Dead

    அடுத்த செய்தி