Home /News /international /

யுகே-வில் 3 பேர் உயிரை பறித்த லஸ்ஸா காய்ச்சல் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை!

யுகே-வில் 3 பேர் உயிரை பறித்த லஸ்ஸா காய்ச்சல் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை!

யுகே-வில் 3 பேர் உயிரை பறித்த லஸ்ஸா காய்ச்சல்

யுகே-வில் 3 பேர் உயிரை பறித்த லஸ்ஸா காய்ச்சல்

Lassa fever என்பது ஒரு வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும். இது விலங்குகளால் பரவும்  கடுமையான வைரஸ் நோயாகும்.

கொடிய கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், மூன்றாம் அலை படிப்படியாக குறியானது வருவது உலக நாடுகளை சற்றே நிம்மதி பெருமூச்சு விட செய்து உள்ளது. எனினும் தொடர்ந்து உலகம் கொரோனா வைரஸ் நோயுடன் போராடி கொண்டிருக்கிறது. இதனிடையே நைஜீரியாவில் முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட லஸ்ஸா வைரஸ் (Lassa virus) காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பால் யுனைடெட் கிங்டமில் 3 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு மருத்துவ நிபுணர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்த லஸ்ஸா வைரஸ் காய்ச்சல் "தொற்றுநோய்கான சாத்தியம்" கொண்டது என்றும் அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். 1980-களில் இருந்து லஸ்ஸா காய்ச்சலின் எட்டு பாதிப்புகள்UK-ல் பதிவாகியுள்ள நிலையில் இதற்கு முன் கடைசியாக 2009-ல் 2 பேர் பாதிக்கப்பட்டனர்.

லஸ்ஸா காய்ச்சல் (Lassa fever) என்றால் என்ன?

யுனைடெட் ஸ்டேட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் ( Centers for Disease Control- CDC) தகவலின் படி, கடந்த 1969-ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் Lassa-வில் தான், இந்த காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. Lassa fever என்பது ஒரு வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும். இது விலங்குகளால் பரவும் கடுமையான வைரஸ் நோயாகும். இது அரேனாவைரஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

இது மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது?

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மாஸ்டோமிஸ் எலிகளின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது வீட்டுப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் லஸ்ஸா காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் உள்ள கொறித்துண்ணிகளில் இந்த நோய் பரவுகிறது. குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் போதுமான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாத நிலையில், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்த நோய் தொற்று பரவலாம் மற்றும் லேபாரட்ரி ட்ரான்ஸ்மிஷனும் (laboratory transmission) ஏற்படலாம் என்று WHO இந்த நோயைப் பற்றிய கூடுதல் தகவலில் தெரிவித்து உள்ளது.

எப்போது முதலில் பதிவாகியது?

கடந்த1969-ஆம் ஆண்டில் இந்த Lassa virus கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் நைஜீரியாவில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட நகரத்தின் பெயரே இந்த வைரஸிற்கு வைக்கப்பட்டது. CDC-ன் அறிக்கைபடி, ஆண்டுதோறும் 100,000 முதல் 300,000 வரையிலான லஸ்ஸா காய்ச்சலின் நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருவதாகவும், இதில் தோராயமாக 5,000 இறப்புகள் பதிவாகி வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அறிகுறிகள்:

லஸ்ஸா காய்ச்சலின் இன்குபேஷன் பீரியட் (incubation period) 2-21 நாட்கள் வரை இருக்கும். WHO-வின் தகவல்படி பெரும்பாலான லஸ்ஸா காய்ச்சல் அறிகுறிகள் மிகவும் லேசானவை மற்றும் கண்டறிய முடியாதவை. இது காய்ச்சல், பலவீனம் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்டவற்றுடன் படிப்படியாக தொடங்குகிறது. நோய்த்தொற்று அதிகரிக்கும் போது பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவிக்க நேரிடலாம் என WHO கூறி இருக்கிறது. நோய் கடுமையானால் முகத்தில் வீக்கம், நுரையீரல் குழியில் திரவம், வாய், மூக்கு, யோனி அல்லது இரைப்பை குடல் உள்ளிட்டவற்றில் ரத்த போக்கு ஏற்படலாம். இப்படி வெளிப்படும் அறிகுறிகளுக்கு பின் பொதுவாக 14 நாட்களுக்குள் மரணம் ஏற்படும் என்று WHO கூறுகிறது.

நோய் கண்டறிதல்:

குறிப்பிடப்படாத காரணத்தால் நோயின் ஆரம்ப கட்டத்தில் லஸ்ஸா காய்ச்சலை கண்டறிவது கடினம். WHO-வின் கூற்றுப்படி, எபோலா வைரஸ் நோய், மலேரியா, ஷிகெல்லோசிஸ், டைபாய்டு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பிற வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலிலிருந்து லஸ்ஸா காய்ச்சலை வேறுபடுத்துவது கடினம்.

Also read... ஆண்டுக்கு நான்கு லட்சம் பேருக்கு குடியேற்றம் வழங்க கனடா புதிய திட்டம்

சிகிச்சை:

வைரஸ் தடுப்பு மருந்தான Ribavirin லஸ்ஸா காய்ச்சல் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதாக CDC தெரிவித்துள்ளது. நோயின் ஆரம்பத்தில் கொடுக்கப்படும் இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது. அதே போல எலக்ட்ரோலைட் பேலன்ஸ், ஆக்ஸிஜனேஷன் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பராமரிப்பது ஆகியவற்றைக் கொண்ட ஒரு சப்போர்ட்டிவ் கேர் அவசியம் என CDC-ஆல் அறிவுறுத்தப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Fever

அடுத்த செய்தி