முகப்பு /செய்தி /உலகம் / சிக்கியது உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு: காதலனால் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

சிக்கியது உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு: காதலனால் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

பிடிபட்ட மலைப்பாம்பு

பிடிபட்ட மலைப்பாம்பு

’பர்மீஸ் பைதான்’ ரக மலைப்பாம்புகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

உலகின் மிகவும் பெரிதான மலைப்பாம்பு ஒன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆய்வாளர்களால் கைப்பற்றப்பட்டது.

ஃப்ளோரிடா மாகாண வன உயிரியல் பாதுகாப்பு மையம் சார்பில் அம்மாகாணத்தில் வன உயிர்களைக் கொல்லும் மலைப்பாம்பைப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான அளவில் சிறிய மிருகங்களான முயல், மான், முதலை, பறவைகள் என ஒரு மலைப்பாம்பு பலவற்றைக் கொன்றுள்ளது.

வன உயிரினப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆய்வாளர்கள் இப்பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஆண் மலைப்பாம்பு ஒன்றில் ட்ரான்ஸ்மிட்டர் பொருத்தி பெண் மலைப்பாம்பு வரும் போது அதைப் பிடித்துள்ளனர். பிடிபட்ட பெண் மலைப்பாம்பு 73 முட்டைகள் உடன் பிடிபட்டுள்ளது.

’பர்மீஸ் பைதான்’ ரக மலைப்பாம்புகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பாம்பு 17 அடி நீளம், 140 பவுண்டு எடையும் கொண்டதாக இருந்துள்ளது.

மேலும் பார்க்க: இந்தியா மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளது: பாகிஸ்தான்


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Python, Wild Animal