பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

மிண்டோனா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Web Desk | news18
Updated: December 31, 2018, 8:06 AM IST
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு
Web Desk | news18
Updated: December 31, 2018, 8:06 AM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. முக்கியமாக, நிலச்சரிவின் காரணமாக பிகால் பகுதி மற்றும் கிழக்கு விசாயஸ் ஆகிய பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மிண்டோனா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


Also see:
Loading...
First published: December 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...